ச.செல்வராஜ், தொல்லியல் துறையில், மண்டல உதவி இயக்குநராக (ப.நி.) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1953-ல் பிறந்த இவர், இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘பண்டைய வரலாறும் தொல்லியலும்’ என்ற பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1979 முதல், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியில் சேர்ந்து, 2011-ல் பணி ஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றியவர். இவரது குறிப்பிடத் தக்க சிறப்புப்பணி, அகழாய்வு தான்.

இவர் காஞ்சிபுரம், கரூர், கங்கைகொண்டசோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர் (சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர் போன்ற பல நில அகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், மூழ்குநராகவும் பணிபுரிந்து, பல அரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக் கொணர்ந்துள்ளார். வானகிரிப் பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றை, மூழ்கிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்த தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் 50-க்கும்மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தருமபுரி அகழ் வைப்பகம், தருமபுரி மாவட்டத் தொல்லியல்கையேடு, மராட்டியர் அகழ் வைப்பகம் போன்ற மாவட்ட வரலாற்று நூல்களும், கோயில்களைப் பற்றிய ‘தகடூர்நாட்டுக் கோயில்கள் தொகுதி – 1’, ‘தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும்’ என்ற நூல்களும், ‘மனோராகையேடு’ என்ற நூலையும் எழுதியுள்ளார். வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

தொல்லியல்மணியில் ‘புதையுண்ட தமிழகம்’ என்ற வெற்றிகரமான தொடரை எழுதியவர்.

http://www.dinamani.com/tholliyalmani/pudhaiyunda-thamizhagam

http://www.dinamani.com/tholliyalmani/thaai-deivangal

 

 

 

Lr. C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் ”காவிரி ஒப்பந்தம்” புதைந்த உண்மைகள் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். தினமணி.காமில் சொத்துகளைப் பற்றிய தொடர். அரசியல் பயில்வோம் தொடர் எழுதிவருகிறார்.

http://www.dinamani.com/MGR—100

http://www.dinamani.com/arasiyal-payilvom

http://www.dinamani.com/sattamani

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/aug/15/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2755757.html

 

 

 

 

த.பார்த்திபன் தகடூர் பார்த்திபன் என்று அழைக்கப்படுவர். தருமபுரியை பிறப்பும், வாழிடமாகவும் கொண்டிருப்பவர். இளங்கலை அறிவியல் கல்வியுடன், குடும்பத் தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். சங்க இலக்கியத்திலும், நவீன இலக்கியத்திலும் ஆர்வம் மிகுந்தவர். தொல்லியலும் வரலாறும் இவர் விருப்பமுடன் தனி முறையில் கற்றவை. ‘சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்’, ‘கிருஷ்ணகிரி மாவட்டம் – சங்ககாலம்’, ‘தொன்மைத் தடயங்கள் – தொகுதி – 1’, ‘கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி – 1, ஊத்தங்கரை வட்டம்’ ஆகிய புத்தகங்கள் இவரது ஆக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ளன.

http://www.dinamani.com/tholliyalmani/yuththa-bhoomi

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>