தியாகிகுமாரசாமி.

தர்மபுரிமாவட்டத்ம்,தஅனுமன்தீர்த்தம்எனும்கிராமத்தில்பிறந்தவர்தியாகிகுமாரசாமி. ஒருஏழைவிவசாயக்குடும்பத்தில்பிறந்தவர். இவர்இந்தியசுதந்திரப்போரில்ஈடுபட்டுபல்வேறுபோராட்டங்களில்பங்குபெற்றுசிறைசென்றார். தேசியநீரோட்டத்தில்இரண்டரக்கலந்தஇவர்புனே, பம்பாய், சென்னை, பெல்லாரி, சங்ககிரிஆகியஇடங்களில்உள்ளசிறைகளில்கடும்சிறைவாசம்அனுபவித்தவர்.

பிரிட்டீஸ்காரார்களின்கொடுங்கோண்மைஆட்சிமக்களைசொல்லொண்னாதுயரத்தில்ஆழ்த்தியது. போதாதுக்குஜமீன்தார்கள்உள்ளிட்டவரிவசூலாளர்கள்மக்களைகசக்கிப்பிழிந்தனர். இந்தியாவின்செல்வங்கள்கோடிகோடியாகலண்டனுக்குகொண்டுபோகப்பட்டன. தட்டிக்கேட்டதேசபக்தர்கள்பலரும்கொடூரமாகதாக்கப்பட்டனர், பலர்படுகொலைசெய்யப்பட்டனர்.

பிரிட்டீஷ்ஆட்சிஎவ்வளவுதான்பயங்கரவாதத்தைகட்டவிழ்த்துவிட்டாலும், அதைஎதிர்த்துபகத்சிங்போன்றுபல்லாயிரக்கணக்கானஇளைஞர்கள்போராட்டக்களம்புகுந்தனர். தங்களின்வரலாற்றுக்கடமையைஆற்றினர்.

பதினைந்துவயதுமுற்கொண்டேதேசவிடுதலைப்போராட்டத்தில்ஈடுபட்டதியாகிகுமாரசாமி, காங்கிரஸ்கட்டசியில்இருந்தசோசலிஸ்ட்பிரிவில்தன்னைமுழுமையாகஈடுபடுத்திக்கொண்டார். பலமுறைகொடுமையானஅடக்குமுறையைசந்தித்தார். தனதுஇளமைப்பருவத்தின்பெரும்பகுதியைசிறைச்சாலையில்கழித்தார். சிறையில்இருந்தபோதுபலதலைவர்களைசந்தித்தஅவர்சோசலிஸ்டுஇயக்கத்தின்தலைவர்களில்ஒருவரானபி.இராமமூர்த்தியைசந்தித்துஅவரின்சிந்தனைகளைஏற்றுக்கொண்டார்.

சுதந்திரத்துக்குபிற்பாடும்பல்வேறுமக்கள்இயக்கங்களில்பங்கெடுத்துக்கொண்டஅவர்சுதந்திரஇந்தியாவில்மலிந்திருந்தஊழல்உள்ளிட்டபல்வேறுசீர்கேடுகள்குறித்துமிகுந்தவருத்தம்கொண்டிருந்தார்.

இந்தியசுதந்திரத்துக்குப்பிறகுஒருநாள்இவர்சேலம்மாவட்டக்கலெக்டர்அலுவலகத்துக்கு (அப்போதுதருமபுரிசேலம்ஜில்லாவில்ஒருதாலுக்காவாகஇருந்தது) சென்றார். அங்குகலெக்டரின்நேர்முகஉதவியாளராகஇருந்தஇளங்கோவன்என்பவரைச்சந்தித்துத்தனக்குஅளிக்கப்படும்தியாகிபென்ஷனும்தாமிரப்பட்டயமும்இனிவேண்டாம்என்றுதிருப்பிக்கொடுப்பதாகச்சொன்னார். அந்தநேர்முகஉதவியாளர்இரண்டுமணிநேரம்குமாரசாமியின்பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்துவிட்டுஅவரைச்சமாதானப்படுத்தமுடியாதநிலையில், கலெக்டர்கருப்பண்ணனைச்சந்திக்கும்படிஅனுப்பிவைத்தார். குமாரசாமியும்கலெக்டரைச்சந்தித்துதனக்குபென்ஷன்வேண்டாம், இந்தத்தாமிரப்பட்டயமும்வேண்டாம்என்றுதிருப்பிக்கொடுத்தார்.

 

கலெக்டர்அதிர்ச்சியில்ஏன்இப்படிச்செய்கிறீர்கள்என்றுகேட்டதற்குகுமாரசாமிசொன்னார்:-

“எனக்கு 15 வயதுஆகும்போதேசுதந்திரப்போராட்டத்தில்குதித்துவிட்டேன். போராடிபலசிறைகளில்இருந்திருக்கிறேன். எனக்குதியாகிபென்ஷனும்இந்தப்பட்டயமும்கொடுத்தார்கள். இவற்றால்எனக்குப்பெருமைஎன்றுநினைத்துவாங்கிக்கொண்டேன். ஆனால்நாங்கள்சிறைசென்றுதியாகம்செய்துவாங்கியஇவைஇப்போதுஎனக்குதேவையில்லை. காரணம்வெள்ளைக்காரர்கள்காலத்தில்இருந்ததைக்காட்டிலும்சுதந்திரஇந்தியாவில்லஞ்சமும், ஊழலும்கரைகடந்துபெருகிவிட்டன. காவல்துறையின்அராஜகமும்அடக்குமுறையும்வெள்ளையர்காலத்தைக்காட்டிலும்அதிகமாகஇருக்கின்றன. சுதந்திரம்பெற்றநாட்டில்மக்களும், அதிகாரிகளும்சுதந்திரத்தின்பெருமையைஉணர்ந்துநேர்மையாகவும், மக்களுக்குநாணயமாகவும்பணியாற்றுவார்கள்என்றுஎதிர்பார்த்தேன். நாளுக்குநாள்இந்தலஞ்சப்பேய்அதிகரிக்கிறதேதவிரகுறைவதாகத்தெரியவில்லை. அதிகாரிகள்வெள்ளைக்காரர்களைவிடதங்களைமேலானவர்களாகக்கருதிக்கொண்டுசொந்தநாட்டையேசுரண்டிக்கொழுத்துவருகின்றனர். இதற்காகவாஇத்தனைப்பாடுபட்டுசுதந்திரம்வாங்கினோம்?”என்றார்.

சுதந்திரம்என்பதுஎன்னஎன்றுநாங்கள்நினைத்தோமோஅந்தசுதந்திரம்இன்றுநாட்டில்இல்லை. அதிகாரவர்க்கம்தலைக்கொழுத்துஆடத்துவங்கிவிட்டது. அரசியல்கட்சிகள்பெருகிவிட்டதனால், அரசியல்குறுக்கீடுகளும், அதிகாரதுஷ்பிரயோகங்களும், நியாயம்செத்துக்கொண்டிருக்கிறதுஎன்றார்குமாரசாமி.

வறுமையில்பிடியில்சிக்கித்தவித்ததியாகிகுமாரசாமிக்குஒருமகனும்ஒருமகளும்உண்டு. மகள்பவானியில்ஆசிரியையாகஇருந்தார். மகன்ராமலிங்கம்துணிவியாபாரம்.

 

post

தகடூர்கோபிஎனஅழைக்கப்பெற்ற.கோபாலகிருட்டினன்(42), பதினைந்துஆண்டுகளுக்குமுன்புகணினியில்தமிழ்மொழியைமிகஎளிதில்காணமுடியாது. ஒவ்வொருவரும்பலவகையானஎழுத்துருக்கள், ஆளுக்கொருதட்டச்சுப்பலகைமுறைஎனதமிழ்பலர்கையில்பலவிதமாகஇருந்தது.

இவைஅனைத்தையும்ஒருங்கிணைக்கதமிழ்ஆர்வலர்கள், தொழில்நுட்பவல்லுநர்கள்சிரமப்பட்டனர். அவர்களில்முக்கியமானவர்தான்தகடூர்கோபி. அவரின்பெயருக்குமுன்னால்உள்ளதகடூரையும்அவரின்செயலிகளின்பெயர்களையும்கண்டாலேஅவரின்தமிழ்பற்றுவிளங்கும்.

நம்தர்மபுரிமாவட்டம்குமாரசாமிபேட்டையைச்சேர்ந்தஓய்வுபெற்றஆசிரியரானதணிகாச்சலம்என்பவரின்மகன்தகடூர்கோபி. இவருக்குதிருமணமாகிஒருமகள், மகன்உள்ளனர். கணினிபொறியியலில்பட்டம்பெற்றஇவர்சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத்உள்ளிட்ட இடங்களில் மென்பொருள்துறையில்பணியாற்றியுள்ளார்.

தமிழ்எழுத்துருக்களையூனிகோடுக்குமாற்றித்தரும்அதியமான்மாற்றி, தகடூர்தமிழ்மாற்றி,ஹைகோபிஆகியகருவிகளைஉருவாக்கிபலசொல்மாற்றி, எனஎழுத்துகள்மாற்றிமென்பொருள்களைஉருவாக்கிஅனைவருக்கும்பயன்படும்வகையில்தந்தவர். தமிழ்மட்டுமல்லாதுதெலுங்கு, கன்னடம், மலையாளம்உள்ளிட்டதென்னிந்தியமொழிகளிலும்எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றிடும்கருவிகளையும்கோபி உருவாக்கியுள்ளார்.

தமிழ்இணையத்துக்குசிறப்பானமுறையில்பணியாற்றியநம்தருமபுரிக்குபெருமைசேர்த்ததகடூர்கோபிஹைதராபாத்தில்கடந்த 2018,ஜனவரி, 28 இயற்கைஎய்தினார்.

post

 

தீர்த்தகிரியார்தர்மபுரியைஅடுத்தஅன்னசாகரத்தில்நவம்பர் 4, 1880 அன்றுதர்மராஜாகோவில்பரம்பரைதர்மகர்த்தாவானநாராயணமுதலியாரின்மகனாகப்பிறந்தார்.

தீர்த்தகிரியார் 20ம்நூற்றாண்டில்துவக்கத்தில்தேசவிடுதலைக்குதீவிரவழியில்செயல்பட்டதலைவர்களானவ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணியசிவா, மகாகவிசுப்பிரமணியபாரதியார், ஆகியோரதுஅணியில்அவர்களின்தோழராகஇருந்தார். ஆஷ்துரையின்படுகொலையாளியைத்தேர்வுசெய்யசீட்டுகுலுக்கிப்போடப்பட்டபெயர்களில்தீர்த்தாகிரியாரின்பெயரும்ஒன்றுஎனஒருதகவல்உண்டு.

பலமுறைஅவர்சிறைசென்றிருக்கிறார். கண்ணனூர்மற்றும்திருச்சிசிறையில்இருந்தபோதுதான்சுப்ரமணியசிவாஅவர்களுடனானநட்புவலுப்பெற்றது. இவரின்துணிச்சலைக்கண்டசுப்ரமணியசிவாஇவருக்கு ’எம்டன்’ என்றுபெயரிட்டார். சிவாஅவர்கள்சிறையிலிருந்துதன்சொந்தஊரானவத்தலகுண்டுசெல்லாமல்தீர்த்தகிரியார்மற்றும்சிலநண்பர்களின்உதவியோடுதான்தர்மபுரிக்குஅருகிலுள்ளபாப்பாரப்பட்டிசென்றுதன்இறுதிகாலத்தைஅங்கேயேகழித்தார். இதற்குதீர்த்தகிரிமுதலியாரும்அவரதுசகலைசின்னமுத்துமுதலியாரும்சுப்ரமணியசிவாமீதுகாட்டியஅன்பேமுக்கியமானகாரணம். சிவாஇறக்கும்வரைஇவர்களின்நட்புதொடர்ந்தது.

சிறையில்சுப்பிரமணியசிவாவுடன்செக்கிழுத்தார். சிறையிலிருக்கும்போதுதடைசெய்யப்பட்டிருந்த ”பாணபுரத்துவீரன்” எனும்நாடகத்தைச்சிறைச்சாலையிலேயேநடித்துக்காட்டினார்.ஏறத்தாழஎட்டுஆண்டுகட்கும்மேலாககொடும்சிறைவாசம்அனுபவித்தவர்.

வ. உ. சிதம்பரனார், திரு.வி.க., கிருபானந்தவாரியார், சுப்ரமணியசிவா, முத்துராமலிங்கத்தேவர், என். ஜி. ரங்கா, சாதுசீனிவாசமூர்த்திபோன்றவர்களோடுநெருங்கியதொடர்புகொண்டிருந்தார்.1930-1931-ல்கள்ளுக்கடைமறியலைதருமபுரியில்தலைமையேற்றுநடத்தினார்.1936-ல்திரிபுராகாங்கிரஸில்அகிலஇந்தியகாங்கிரஸ்தலைமைதேர்தலில்காந்தியடிகளின்ஆதரவுபெற்றபட்டாபிசீதாராமையாவுக்குஎதிராகராஜாஜியிடம்சொல்லிவிட்டேசுபாஸ்சந்திரபோஸுக்குஓட்டளித்தார்.

தீர்த்தகிரியார்அவர்கள்சிலகாலம்பாரதியாருடன்தலைமறைவாகவும், சிலகாலம்நாடுகடத்தப்பட்டும்பாண்டிச்சேரியில்இருந்தார்.விடுதலைபோராட்டங்கள்பலவற்றிலும்தனக்குவாய்த்தமெய்த்தொண்டராகஅருஞ்சகாவாக, தியாகச்சுடராகதீர்த்தகிரியார்திகழ்ந்தாரெனதமிழ்நாடுசுதந்திரப்போராட்டவீரர்கள்சங்கத்தலைவர்டாக்டர்எம். சோமயாஜிலுகூறியுள்ளார்.

சிறைக்குவெளியேவாழ்ந்தகாலத்தில்தீர்த்தகிரியார்சுதந்திரபோராட்டத்தைவிரிவுபடுத்துவதில்ஆழ்ந்தஅக்கறைகாட்டினார். சுதந்திரபோராட்டத்தைப்பரப்பநாடகம்சிறந்தஉத்தியாகயிருந்தது. இவர்பலமுறைவள்ளித்திருமணம், கோவலன், சதாரம்போன்றநாடகங்களைத்தானேஎழுதியும், நடித்தும்அரங்கேற்றியவர். நாடகத்தினிடையேசுதந்திரப்போர்கருத்துக்களைத்தக்கவாறுவெளிப்படுத்துவார். சுதந்திரப்போராட்டம்பற்றிதுண்டுபிரசுரங்களைஊரெங்கும்வழங்குவார். விடுதலைபோராட்டசெய்திகள்இருட்டடிப்புசெய்யப்பட்டகாலமென்பதால்போராட்டசெய்திகளைக்கையெழுத்துபிரதிகளாக்கிவெளியிடுவதுஅவசியமானபணியாகயிருந்தது. . தீர்த்தகிரியாரின்மாப்பிள்ளைஎம். எஸ். ஐயம்பெருமாள், முன்னாள்ஜனதாதளத்தலைவர்ஜி. ஏ. வடிவேலு, டாக்டர். தெய்வம்போன்றவர்கள்தீர்த்தகிரியின்தலைமையில்செயல்பட்டவர்களுள்குறிப்பிடத்தக்கவர்கள்.

எல்லோரும்கல்வியறிவுபெறவேண்டுமென்றஆர்வமேஇவரைதர்மபுரிகுமாரசாமிபேட்டையிலுள்ளசெங்குந்தர்பள்ளியின்வளர்ச்சியில்மிகுந்தஅக்கறைகாட்டச்செய்தது. அப்பள்ளிக்குக்கட்டிடம்கட்டித்தந்ததில்தீர்த்தகிரியாரின்பங்குமிகவும்குறிப்பிடத்தக்கது.

தன்குடும்பவாழ்விற்குத்தேவையானபணத்தைதான்அறிந்தநாட்டுமருத்துவத்தின்மூலமேஈட்டினார். பற்பொடி, தலைவலிமருந்து, லேகியங்கள்தயாரித்தார். தான்தயாரித்தசித்தபல்பொடிக்குதேசபக்தர்சித்ரஞ்சன்பெயரில்சித்ரஞ்சன்பல்பொடிஎன்றும், தலைவலிமருந்துக்குசித்ரஞ்சன்பாம்என்றும்பெயரிட்டார் .ஆயுர்வேதமருத்துவத்தில்இருந்ததிறமையைசுப்பிரமணியசிவாவின்அறிவுரையால்விரிவுபடுத்திக்கொண்டார் . சிறைவாழ்க்கையின்போதுநூற்றுக்கணக்கானபோராட்டவீரர்களின்வயிற்றுக்கடுப்புநோயைஆங்கிலமருத்துவம்பலன்தராததால்சிறைஅதிகாரியின்வேண்டுகோளின்படிகுணமாக்கினார் .

நெசவுத்தொழிலில்ஆரம்பம்முதல்ஈடுபாடும், அனுபவமும்கொண்டஇவர்தர்மபுரியில்உள்ளநெசவாளர்களின்வாழ்க்கைத்தரத்தைஉயர்த்தஒருகைத்தறிநெசவாளர்கூட்டுறவுசங்கத்தை 12.01.1938-ல்நிறுவினார்.1928-ம்ஆண்டுடாக்டர்அன்சாரிதலைமையில்நடந்தகாங்கிரஸ்மாநாட்டிற்குகயிற்றுக்கட்டில்கள்வாங்கிஅனுப்பியதில்இவருக்குபெருத்தபொருள்இழப்புஏற்பட்டது. ஆயினும்அதற்காகவருந்தவில்லைதருமபுரியின்வளர்ச்சிக்காகபாடுப்பட்டதுமட்டுமல்லாமல்தன்னுடையசொந்தநிலத்தைபேருந்துநிலையம்மற்றும்பூங்காஅமைக்கதானம்கொடுத்தார்.நாட்டின்விடுதலைக்காகவேதமதுஉடல், உழைப்பு, உயிர்அனைத்தையும்அளித்துதான்பெரியநிலச்சுவான்தாராய்இருந்தும்தன்சொத்துகளைஎல்லாம்நாட்டின்விடுதலைசேவைக்காகசெலவுசெய்துஇவர் 03.03.1953-ல்ஏழ்மையிலேயேஇறந்தார்.

தர்மபுரிநெசவாளர்காலனியிலும், தர்மபுரியைஅடுத்தஅன்னசாகரத்திலும்இவரதுசிலைநிறுவப்பட்டுள்ளது.தர்மபுரியைஅடுத்தஅன்னசாகரத்தில்ஒருதெருவுக்கும், சேலம் அம்மாபேட்டையிலும், தர்மபுரி குமாரசாமிபேட்டையிலும்தலாஒருசாலைக்குதியாகிதீர்த்தகிரியார்பெயர்சூட்டப்பட்டுள்ளது.  தர்மபுரிநகரின்தற்போதையநகரபேருந்துநிலையம்தியாகிதீர்த்தகிரியார்திடலாகவிளங்கியது. இந்நிலையில்நகரபேருந்துநிலையத்திற்குதியாகிதீர்த்தகிரியார்பெயர்வைக்கநகரமன்றம்முடிவுசெய்துள்ளது.

தியாகிதீர்த்தகிரியார்நூற்றாண்டுவிழாதர்மபுரிநெசவாளர்காலனியில், சுப்ரமணியசிவாஅரங்கில் 05.10.1985 அன்றுசிறப்பாகக்கொண்டாடப்பட்டது.நூற்றாண்டுவிழாவையொட்டிநடைபெற்றதீர்த்தகிரியார்சிலைதிறப்புவிழாவிற்குகேரளஆளுநர்பா. இராமச்சந்திரன்தலைமைதாங்கினார். தீர்த்தகிரியார்சிலையைத்திறந்துவைத்ததுஅப்போதையஇந்தியக்குடியரசுத்துணைத்தலைவர்ஆர். வெங்கட்ராமன்.

காமராசர்பலமுறைதேர்தலில்நிற்கச்சொல்லிகேட்டபோதும்தமக்குஎந்த பதவியும்வேண்டாம்எனமறுத்துவிட்டுதொடர்ந்துநாட்டுமுன்னேற்றத்தில்கண்ணும்கருத்துமாகவே

post

ஒருங்கிணைந்தசேலம்ஜில்லா, தேவூர்எனும்கிராமத்தில்ஒருபிரபலமானசெல்வந்தர்குடும்பத்தில் 30.09.1909ல்பிறந்தார்அண்ணாஜி. உயர்நிலைப்பள்ளியில்மாணவராகஇருந்தபோதே 1930ம்ஆண்டுவாக்கில்நடந்தஇந்தியவிடுதலைப்போராட்டத்தில்பங்கெடுத்தஅவர்கொடும்தடியடிக்கும், 1 வருடசிறைதண்டனைக்கும்ஆளானார்.

சிறுவயதிலிருந்தேமக்களின்மீதுஆழ்ந்தபற்றுகொண்டஅண்ணாஜிகாலரா, பிளேக்போன்றகொள்ளைநோய்கள், குருவிகளைப்போலமக்களைகொத்துக்கொத்தாய்கொல்லும்அவலம்கண்டுமுறையானஅறிவியல்மருத்துவத்தின்தேவையைஉணர்ந்தார். தனதுதந்தையின்பலத்தஎதிர்ப்பையும்மீறி 1934ம்ஆண்டுசென்னைஸ்டான்லிமருத்துவக்கல்லூரியில்சேர்ந்துமருத்துவம்படித்தார்.

மருத்துவப்படிப்புக்குபிறகுலலிதாஎன்றபெண்ணைதிருமணம்செய்துகொண்டமருத்துவர்தொடர்ந்துதேசவிடுதலைப்போராட்டத்தில்தனதுமனைவியுடன்பங்கெடுத்தார். 1940ம்அண்டில்நாடெங்கும்நடந்ததனிநபர்சத்யாகிரகத்தில்பங்கெடுத்தமருத்துவர், தனதுமனைவிலலிதாவுடன்இணைந்து 9 மாதசிறைதண்டனைபெற்றார். லலிதாவேலூர்பெண்கள்சிறையிலும், அண்ணாஜிதிருச்சிமத்தியசிறையிலும்அடைக்கப்பட்டனர். சிறையில்இருந்தஅந்த 9 மாதகாலத்தில்தான்அண்ணாஜிவாழ்வில்மகத்தானமாற்றம்உண்டானது. ஏற்கனவேசத்யாகிரகபோராட்டத்தில்பங்கெடுத்துசிறையில்அடைக்கப்பட்டிருந்தகம்யூனிஸ்டுகளானபி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன்ஆகியோருடன்விவாதித்துவெளியில்ஒருபொதுவுடைமைசிந்தனையாளராய்திரும்பினார்.

சிறைவாசத்துக்குப்பிறகுதனதுமனைவிலலிதாவுக்கும்பொதுவுடமைக்கொள்கைகளைபோதித்துஅவரையும்முழுநேரகம்யூனிஸ்டாக்கினார். லலிதாதனதுஇறுதிமூச்சுவரைஒருஅறிவார்ந்தகம்யூனிஸ்ட்டாகத்திகழ்ந்தார்.

சிறைவாசத்திற்குப்பிறகுபலபகுதிகளில்சுற்றிவந்தஅண்ணாஜிஇப்போதையகிருஷ்ணகிரிமாவட்டத்திலுள்ளகாவேரிப்பட்டிணம்பகுதியில்தனதுமருத்துவசேவையைஆரம்பித்தார். காவேரிப்பட்டிணம், காரிமங்கலம்பகுதிகளில்இருந்தமிட்டாதாரர்களும்உயர்சாதிஆதிக்கசக்திகளும்விவசாயிகளையும், விவசாயக்கூலிகளையும்கொடுமையாகஅடக்கிசுரண்டிக்கொண்டிருந்ததுகண்டுமனம்பதைத்தார். விளைச்சலில்பெரும்பகுதியினைமிட்டாதாரர்கள்அபகரித்துவிடபெரும்வறுமையில்விவசாயிகள்விழிபிதுங்கிநின்றனர். இந்தகொடுமையைபோக்கஉறுதிமிக்கவிவசாயிகளின்சங்கமேஒரேதீர்வுஎனமுடிவுசெய்தார்.

முதல்முதலாககாவேரிப்பட்டிணம்ராமபுரம்பகுதியில் 1942-ம்ஆண்டுஅண்ணாஜியால்விவசாயசங்கம்கட்டப்பட்டது. “தமிழகத்திலேயேமுதன்முதலில்ஸ்தாபனரீதியில்விவசாயிகளைஅணிதிரட்டியபெருமைடாக்டர்அண்ணாஜியையும், அவர்மனைவிலலிதாவையுமேசாரும்.” எனவிவசாயசங்கதலைவர்சீனிவாசராவ்பெருமையுடன்குறிப்பிட்டுஎழுதியிருக்கிறார். தஞ்சைவிவசாயிகளின்பேரெழுச்சிகூடஅண்ணாஜிதலைமையிலானபோராட்டத்திற்குப்பின்னிட்டேஎழுந்ததுஎன்பதுகுறிப்பிடத்தக்கது. சுமார்ஆறுமாதத்துக்கும்மேலாய்நடந்தவிவசாயிகளின்போராட்டம்அண்ணாஜியின்சீரியவழிகாட்டுதலால்வெற்றியுடன்முடிந்தது.

வெற்றிகொடுத்தஉற்சாகமானதுகாரிமங்கலம், காவேரிப்பட்டிணம்வட்டாரம்முழுவதுமேபற்றிப்படர்ந்தது. பலஇடங்களிலும்விவசாயிகள்சங்கம்கட்டவேண்டிதொடந்துவிண்ணப்பங்கள்குவிந்தவண்ணம்இருந்தன. ஒருகட்டத்தில்விவசாயிகளின்எழுச்சிகண்டுஅண்ணாஜியேதிகைத்துப்போய்விட்டார். திகைப்பிலிருந்தும், குழப்பத்திலிருந்தும்விடுபடபொதுவுடைமைஇயக்கத்தின்தேவைகுறித்துஉணர்ந்தஅண்ணாஜிகம்யுனிஸ்ட்இயக்கத்தின்மையநீரோட்டத்தோடுதன்னைஆழமாய்ப்பிணைத்துக்கொண்டார். அவரின்மறைவுவரைஅந்தஉறவுதொடர்ந்தது.

தொடர்ந்துஇயக்கநடவடிக்கையில்தீவிரமாகப்பங்கெடுத்தஅண்ணாஜி 1947 சுதந்திரத்தின்போதுபாதுகாப்புகைதியாய்சிறைவைக்கப்பட்டார். அதேஆண்டுதமிழகவிவசாயசங்கத்தின்மாநிலஅமைப்புக்குழுஉருவாக்கப்பட்டபோதுஅவர்மனைவிலலிதாமாநிலஉதவிசெயலாளராகவும், அண்ணாஜிமாநிலகவுன்சில்உறுப்பினராகவும்தேர்வுசெய்யப்பட்டனர். அதேஆண்டுவிஜயவாடாவில்நடந்தஅகிலஇந்தியவிவசாயிகள்சங்கமாநாட்டில்இருவரும்தமிழகம்சார்பாகபங்குபெற்றனர்.

1948ம்ஆண்டுபொதுவுடைமைஇயக்கம்தடைசெய்யப்பட்டுகொடும்அடக்குமுறைகட்டவிழ்த்துவிட்டபோதும், தைரியத்தோடுசெயலாற்றியமருத்துவர்தெய்வம், பஞ்சாட்சரம், சின்னதம்பிஉள்ளிட்டஉறுதிவாய்ந்தநபர்களைஉடன்இணைத்துக்கொண்டுபணியாற்றினார்.

லலிதாதனதுகணவரின்அடியொற்றிமக்கள்பணியில்தன்னைஈடுபடுத்திக்கொண்டார். 1949ல்ஏற்பட்டஅவரின்திடீர்இறப்புகம்யூனிஸ்டுகட்சிக்கும், அண்ணாஜிக்கும்ஈடுசெய்யமுடியாதஇழப்பாகஅமைந்தது. தனது 29 வதுவயதில்அந்தஅம்மையார்இறந்ததுமருத்துவரைப்பெரிதும்பாதித்தது. துணைவியாரின்இறப்புக்குப்பிறகுமீளாததுன்பத்தில்ஆழ்ந்தஅண்ணாஜி, உறவினர்களின்நச்சரிப்பில்இரண்டாவதாகஉறவுக்காரப்பெண்ஒருவரைத்திருமணம்செய்துகொண்டார்.

நடைமுறைதொடர்பானசெயல்பாடுகளில்எப்போதும்அதீதஆர்வம்கொண்டமருத்துவர் 1963ல்கட்சிஇரண்டாகஉடைந்தபோதுசி.பி.எம்இல்இணைந்துசெயலாற்றினார். தனதுவாழ்வின்கடைசிமூச்சுவரைபொதுவுடைமைஇயக்கங்களின்பால்பற்றுகொண்டமருத்துவர்கட்சிபேதம்பார்க்காமல்நச்சல்பாரிஇயக்கத்தின்தலைமறைவுநபர்களுக்கும்அச்சமின்றிமனம்விரும்பிவைத்தியம்பார்த்தவர்.

மக்களின்மருத்துவராக….
————————————————-

விவசாயசங்கத்திலும்பொதுவுடைமைஇயக்கத்திலும்முக்கியநிர்வாகியாகத்திகழ்ந்தஅண்ணாஜிமகத்துவம்மிகுந்த, முன்னுதாரணமானமருத்துவராகத்திகழ்ந்தார். ஆங்கிலமருத்துவம்வர்த்தகநோக்கோடுகொள்ளைக்கூடாரமெனமலிந்துபோய்விட்டஇன்றையசூழலில்அவரின்தியாகம்தன்னிகரில்லாதது.

1940களின்துவக்கத்தில்நாடெங்கும்பரவியகாலராநோய்க்குப்பலர்பலியாயினர். டாக்டர்அண்ணாஜிவீடுவீடாகச்சென்றுஇலவசமாகவைத்தியம்பார்த்தார். நோயாளிகளுக்குசெலுத்தப்படும்ஊசியில்கலக்கப்படும்டிஸ்ட்டில்டுவாட்டர்இல்லாதகாலத்தில்இளநீரைக்காய்ச்சிஆறவைத்துஊசிக்குப்பயன்படுத்தினாராம்.

1942ல்இந்தியாவெங்கிலும்பிணக்குவியலைஏற்படுத்தியபிளேக்நோய்; அந்தக்காலத்தில்வைத்தியம்பார்த்தபலரையும்விட்டுவைக்கவில்லை. அப்போதும்அசராமல்கடமைஉணர்வோடுவைத்தியம்பார்த்தமருத்துவர்; உறவினர்களேசெல்லத்தயங்கியதென்பென்னைஆற்றங்கரையிலிருந்தபிளேக்முகாமுக்குநணபர்களுடன்சென்றுதாமேஇறந்தவர்களைஅடக்கமும்செய்தார்.

தனதுவாழ்நாளில்அரையணாவுக்கும்காலணாவுக்கும்வைத்தியம்பார்த்தஅண்ணாஜி 1992ம்ஆண்டுமறைந்தார். கிருஷ்ணகிரியில்தான்நடத்தியமருத்துவமனையையும்கம்யூனிஸ்டுகட்சிக்கேஎழுதிவைத்துவிட்டார்.

பக்கம்பக்கமாய்எழுதிக்குவிக்கலாம். மேடைதோரும்வீராவேசமாகநீட்டிமுழங்கலாம். ஆனால்களத்தில்இறங்கிவலுவானமக்கள்போராட்டத்திற்குத்தலைமைதாங்கிவழிநடத்துவதேஒருபோராளியின்இலக்கணமாகும். அத்தகுஇலக்கணத்துக்குஎடுத்துக்காட்டாய்அமைந்திருக்தடாக்டர்அண்ணாஜியின்வாழ்வுநமதுமண்ணின்பெருமையைபறைசாற்றுகிறது.

 

post

சுதந்திரஇந்தியாவில்தமிழ்நாட்டின்முதல்சட்டசபைத்தேர்தலில்தருமபுரிதொகுதியின்முதல்சட்டமன்றஉறுப்பினர்காலஞ்சென்றபி.ஆர். இராஜகோபால்கவுண்டர்.

கடந்த 1952 ம்ஆண்டுமேமாதம் 3ம்தேதிநடைபெற்றதேர்தலில்கட்சிசாராமல்சுயேட்சையாகப்போட்டியிட்டதிரு. இராஜகோபால்கவுண்டர்அவர்கள் 7262 வாக்குகள்பெற்றுவெற்றிபெற்றார். இவரைஎதிர்த்துபோட்டியிட்டதிரு.ஆர்.எஸ். வீரப்பசெட்டியார்அவர்கள் 6984 வாக்குகள்பெற்றுஇரண்டாமிடம்பிடித்தார். வாக்காளர்களுக்கானதகுதிகள்விரிவுபடுத்தப்படாதஅன்றைக்குகுறைவானவாக்காளர்களேஇடம்பெற்றனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

தருமபுரிநகரம்மதிகோண்பாளையத்தில்பெரும்செல்வந்தர்குடும்பத்தில் 05.01.1901ல்பிறந்தஇராஜகோபால்கவுண்டர் 6-ம்வகுப்புவரைபடித்தவர். தனதுஇளம்வயதிலேயேபொதுச்சேவைகளில்ஈடுபடத்தொடங்கியஅவர்தனதுமறைவுவரைசெல்வாக்குமிகுந்த, தருமபுரிமக்கள்போற்றிப்புகழும்மனிதராகவேஇருந்தார்.

இப்போதுஇருக்கும்தருமபுரிபேருந்துநிலையமும்சரி , அதன்அருகில்உள்ளபூங்காவும்சரிநகரில்இருக்கின்றபலமுக்கியஅரசுஇடங்களும்சரிஇவர்தனதுசொந்தசொத்தினைதானமாககொடுத்தஇடத்தில்அமைக்கப்பட்டவையாகும். இதன்காரணமாகவேபேருந்துநிலையமும், பூங்காவும்இன்றைக்கும்அவர்பெயரிலேயேஅழைக்கப்படுகின்றது.

தனதுமுதற்கட்டசட்டமன்றபிரவேசத்துக்குபின்புஏறத்தாழ 18ஆண்டுகள்உயிருடன்இருந்தஅவர்பிற்பாடுஏனோதேர்தலில்நிற்கவேஇல்லை. பல்வேறுஈகைகளுக்குச்சொந்தக்காரரானவள்ளல்திரு. இராகோபால்கவுண்டர்ஜயாஅவர்கள்பெரும்புகழ்ஈட்டிகடந்த 07.02.1970ல்தனது 69 வதுவயதில்காலமானார்.

தமிழக வரலாற்றில், அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சிபுரிந்த சங்ககாலத்திய தகடூர் நாடு எது? அது எந்த அளவிற்குப் பரந்து விரிந்திருந்திருந்தது என்பது தொடர்ந்து விவாதத்திற்கு உரிய பகுதியாகவே உள்ளது. தகடூர் நாட்டின் எல்லைகள் குறித்த பழம்பாடல் எதுவும் கிடைக்காமையால், தகடூர் நாட்டின் எல்லைகுறித்த நம்முன்னோர்களின் கருத்துக்கள் நமக்குத் தெரியவில்லை. “சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, கொங்குமண்டலம், தொண்டைமண்டலம், நடுநாடு”கள் தமக்கான எல்லைகளை வரையறுக்கும் பழம்பாடல்களைக் கொண்டிருக்கின்றன. இவை ஒருசேரக் கிடைப்பதாலேயே இந்நாட்டுப்பிரிவுகள் சங்ககாலம் முதலே இருந்த தமிழக நாட்டுப்பிரிவுகள் என்ற மயக்கம் வரலாற்று ஆசிரியர்களிடையே உண்டு. ஆனால் நாட்டுப்பிரிவு என்பது ஒரு ஆளும் அரசின், குடியின், குலத்தின் அதிகாரம் செல்லுபடியாகும் நிலத்தின் வரையறுத்தப் பரப்பளவினைக் கொண்டது. இதனால், கொங்குமண்டலம், தொண்டைமண்டலம், நடுநாடு ஆகிய பிரிவிகள் தனித்த நாடுகள் என்ற வரையறைக்குள் வருவதில்லை. இம்மூன்று மண்டலங்களுக்குள்ளும் பல்வேறு அரசுகள் தம் அதிகார எல்லையை பகுத்துக் கொண்டு தம்தமது ஆட்சியை செழுத்தியுள்ளன. இதனால் இம்மூன்று பிரிவுகளும் சங்ககாலமுதல் இருந்துவரும் நாடுப்பிரிவுகள் என்பது ஐயத்திற்கிடமானதே.

துவக்க கால ஆய்வுகள் தகடூர் நாடு என்பது இன்றைய தருமபுரி வட்டத்தைச் சார்ந்து அமைந்திருந்த நாடு என்ற கருதப்பட்டது. பின்னர் அதன் பரப்பு இன்றைய தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதியைக் கொண்டுந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆய்வு வளர வளர தகடுர் நாடு இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டப்பகுதிகளை உள்ளடக்கியது என்றும், சேலம், நாமக்கல் மாவட்டப்பகுதிகளை உள்ளடக்கியது என்றும் தகடூர் நாட்டின் எல்லை விரிவுபடுத்திய ஆய்வு முடிவுகள் வெளியாயின. துவக்ககால கருத்துவ முடிவுகளுக்கு மாறான இந்த ஆய்வு முடிவுகள், தகடூர்நாடு குறித்த மேலாய்வுகளைத் தொடரச்செய்துள்ளன. அண்மைகால த.பார்த்திபன் ஆய்வு கீழ்கண்ட முடிவை முன்வைகிறது.

சங்ககாலத்தின் துவக்கத்தில் தகடூர் நாடு இன்றைய தருமபுரியான தகடூருக்குக் கிழக்கில் இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குஎல்லைவரை விரிந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் இன்றைய கடலூர் மாவட்டம் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்து விருதாச்சலம் என்ற முதுகுன்றம் அதியர் மரபினரான “முதுகுன்றம் கண்ணன் எழினி” என்பவனுக்கு உரிமை உடையதாக மாமூலனாரின் 197-வது பாடல் தெரிவிக்கிறது. இந்த “முதுகுன்றம் கண்ணன் எழினி” தகடூருக்கு உரிமையானவனாகச் சொல்லப்படாமையால் இவன் முதுகுன்றத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அதியரின் கிளை மரபினன் என்பது விளங்குகிறது. இவனை வீழ்த்தி சோழர் தம் ஆட்சிப்பரப்பை விரிவாக்கிக்கொண்டதை மாமூலனாரின் மேற்குறிப்பிட்ட பாடலே சான்றாகிறது.

 

இன்றைய விழுப்புரம் மாவட்டத்துத் திருக்கோவிலூர், மலாடு நாட்டுப்பகுதியாக மலையமான் மரபினர் வசம் இருந்துள்ளது தெளிவானது. எனவே இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்கு எல்லை சங்ககாலத் தகடூர் நாட்டின் எல்லையாக இருந்துள்ளது. மேற்குத்திசையில் மைசூர் பீடபூமியின் கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளும், தகடூரின் வடக்கே புன்னாடு வரியிலான அல்லது இன்றைய பெங்களூருப் பகுதியின் மேற்கு மற்றும் வடமேற்கு எல்லைவரை நீண்டுள்ளது. இதில் கோலார் உட்பட்டபகுதிகள் அடங்கியுள்ளன. தெற்கே இன்றைய நாமக்கல் மாவட்டப் பகுதியின் தென் எல்லையும், வடக்கு எல்லையாக வடபெண்ணையும், வடகிழக்கு எல்லையில் காஞ்சிப்பகுதி தொடங்குகிறது என கருதமுடிகிறது.

இந்நிலப்பரப்பினுள் காணமுடிகின்ற கொல்லிமலை ஓரியும், கண்டீரம் நாட்டு நள்ளியும், தகடூர் நாட்டினுள் இருந்த சுதந்திர அரசுகள் அல்லது அதியாமான்களுக்கு அடங்கிய அரசுகளாக இருக்கக்கூடும். இப்பரபினுள் காணும், செங்கன்மா நன்னன் உள்ளிட்ட அரசுகள், அதியமான்களின் வீழ்ச்சிக்குப்பின் தகடூர் நாட்டை சிறுசிறு துண்டுகளாக்கி எழுந்த அரசுகளாகின்றன என்பது வரலாறுப் போக்கிலான நிகழ்வுகளாகும்.

(இக்கட்டுரை த.பார்த்திபனின், சங்ககாலத்தமிழகமும் அதியர் மரபினரும், கிருஷ்ணகிரி மாவட்டம்-சங்ககாலம் மற்றும் ச.செல்வராஜின் தகடூர் நாட்டில் சமணமும் பெளத்தமும் நூலில் அணிந்துரையாக இடம்பெற்ற “தகடூர் நாடு” கட்டுரை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.)

****

‘தகடூர்’ என்ற பெயர்ச்சொல் ஒரு நாட்டின் பெயரையும் ஒரு ஊரின் பெயரையும் சுட்டும் ஒன்று. வரலாற்றுக்காலத்தின் தொடக்கம் முதல் அறியப்படும் இப்பெயர் கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக 2000 ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்த பெயராகும்.

தகடூர் பெயரை தகடு+ஊர் என பிரித்துப் பொருள்கொள்ளலாம். ‘தகடு’ என்பதற்கு ‘மென்மையும் தட்டையுமான வடிவு’ என்பது பொருள். சங்க இலக்கியத்தில் தகடு என்னும் சொல் 1.‘தகட்டு வடிவப்பொருள்’ 2.‘பொன்’, 3.‘பூவின் புற இதழ்’ ஆகிய முப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது (இளங்குமரனார்:2009:பக்.1-2). அவற்றுள்ளும் “கருந்தகட் டுளைப்பூ மருது” (முருகு: வ-27), “தூத்தகட் டெதிர்மலர்” (நற்:52), “வேங்கை மாத்தகட் டொள்வீ (புறம்:202), “கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ (ஐங்குறு:219), “கானப் பாதிரிக் கருந்தட்டு” (அகம்:261) எனப் பூவின் புறவிதழ் என்ற பொருளில் பெருவழக்குப் பெற்றுள்ளது.

‘தகடு’ என்பது பொதுவாக பூவின் புற இதழை குறிப்பாக தாமரை இதழை குறிக்கும் சொல் என்பதும் மேற்கண்ட பொருளைச் சார்ந்ததே. தகடூர் ‘தகடை’ தகட்டூர், ‘தகட்டா’, ‘தகடா’, ‘தகடு’ என்றும் அழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. பிற்காலக் கல்வெட்டு ஒன்று ‘தடங்கமலத் தகடை’ என்று இவ்வூரை குறிப்பிடுவது, இவ்வூர் தாமரை மலரின் வடிவில் அமைந்த காரணத்தலே என்பர் (இராசு.(மே.கோ)-நா.மார்க்சியகாந்தி,1998,ப.56). ஆனால் நகரமைப்பு போன்ற முன்னேற்றங்கள் தோன்றாத காலத்திற்கு முற்பட்டே வழக்கத்தில் இருக்கும் இப்பெயருக்கு இயற்கையமைதியில் பொருள் கொள்வதே சரியாக இருக்கும் (நா.மார்க்சியகாந்தி, மேலது).

தகடூரின் நடுப்பகுதி சமவெளிப்பகுதியாகவும் சுற்றிலும் மலைகளாகவும் அமைந்துள்ளது. எனவே மலைகளுக்கு நடுவே அமைந்த தட்டையான மென்மையான சமவெளிப்பகுதியில் அமைந்த ஊர் என்பதால் ‘தகடூர்’ என்று பெயர்ப்பெற்றது. இந்த வகையில் நிலவியல் அடிப்படையில் இப்பெயர் ஒரு காரணப்பெயராகும்.

இக்காரணப்பெயர் தவிர மறுபரிசீலனை செய்ய வேண்டிய பல கருத்துக்கள் பல அறிஞர்களால் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

 1. “அகவிதழைப் பாதுகாக்கும் புறவிதழ் போன்ற மதிலையுடைய ஊரென்னும் பொருள்பட அதியமான் தன்னூர்க்குத் தகடூர் எனப்பெயர் வைத்தான்”. (புலவர்.பாண்டியனார். ‘எழினி’.(மே.கோ)- இளங்குமரனார், 2009:பக்.1-2)
 2. “தகடு என்பது உயரமின்றித் தகடாக அமைந்த மலையைக் குறிக்கும். ஆகையால் அம்மலை சார்ந்த ஊர் தகடூர் எனப் பெயர் பெற்றது. இவ்வாறு பொருள் கொள்வதும் இயற்கை தழுவியதாம்”. (இளங்குமரனார், 2009:ப.2)
 3. “தகரமரம் என்ற ஒரு வகை மரம் இப்பகுதியில் நிறைந்திருந்தால் இந்த மரத்தின் அடிப்படையில் தகடூர் என்ற பெயர் வந்தது என்று மற்றொரு கருத்து உள்ளது. மரம், செடி, கொடி போன்றவற்றின் பெயரில் நாட்டின் பெயர் வருவது இயற்கை” (தி.சுப்பிரமணியன்,2010:ப.4)

தகடூர் – அறியப்பட்ட முதல் சொல்லாட்சியும் காலகட்டமும்

வரலாற்றுத் தொடக்ககாலம் முதல் தகடூர் என்ற ஊர்ப்பெயர் வழக்கில் இருந்துள்ளது என்பது மேலே குறிப்பிடப்பட்டது. இப்பெயரை முதலில் எங்கு யார் பயன்படுத்தியது என்ற கேள்விக்கு விடை காணவேண்டியது அவசியமாக உள்ளது.

வரலாற்றுக்கால வரையறை ஒரு பார்வை

தமிழகத்தின் வரலாற்றுக் காலம் சங்க இலக்கிக்கிய காலத்துடன் தொடங்குகிறது என்ற வறையரை பொதுவில் அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்ட ஒன்று. எந்த ஒரு நாட்டின் அல்லது எந்த ஒரு பகுதியின் வரலாறும் எழுத்துப்பூர்வமான ஆதாரம் கிடைக்கும் காலகட்டத்தில் இருந்தே தொடங்குகிறது. இதன் காரணமாக வடஇந்தியாவின் வரலாற்றுக் காலம் மு.பொ.ஆ. 1500 (மு.பொ.ஆ = முன் பொது ஆண்டு வறையரை, BCE1500. பழைய வறையரையில்: கி.மு.1500)-இல் தொடங்குகிறது.*அ.கு-1 அதே சமயதில் தென்னிந்தியாவின் குறிப்பாக பண்டைய தமிழகத்தின் வரலாற்றுக் காலம் மு.பொ.ஆ. 400 (BCE400. பழைய வரையறையில்: கி.மு.400)-இல் தொடங்குகிறது. சிந்துவெளி எழுத்துக்கள் அனைவராலும் ஏற்கத்தக்க அளவில் படிக்கப்பட்டால் இந்தியாவின் வரலாற்றுக்காலம் மு.பொ.ஆ. 2500-இல் இருந்து தொடங்கும். சிந்துப்பகுதியில் அவ்வப்போது பல்வேறு நாட்டு தொல்லியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகள் சிந்துவெளி நாகரிகத்தின் காலக்கணிப்பைத் தொடர்ந்து முன்நோக்கிக் நகர்த்திக்கொண்டே இருக்கின்றன. இந்நகர்த்தலைக் கணக்கில் கொண்டால் இக்கால வறையரையை உலகின் மிகத்தொன்மையான சுமேரியப்பண்பாடுக் காலகட்டமான மு.பொ.ஆ. 3100 அளவினதாகவோ அதற்கும் முற்பட்டதாகவோ இருக்கக்கூடும் என கவனிக்கத்தகுந்த அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிந்துவெளி எழுத்துக்கள் கொண்டு இந்தியாவின் வரலாற்றுக் காலம் எவ்வளவு முன்கொண்டு செல்லப்படுமோ அவ்வளவினதாக தமிழகத்தின் வரலாற்றுக்காலத்தை முன்கொண்டுச் செல்லமுடியும். அதற்கான தொல்லியல் சான்று குறிப்பாக பாறை/குகை ஓவியங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இச்சான்றைப் பொருத்த அளவில் தகடூர்ப்பகுதியின் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் பெரும்பங்கை வழங்குகிறது. *அ.கு-2

மேலே விவரித்தவை தற்போது ஒரு தர்க்கத்திற்கும், விரிவான பருந்துப் பார்வைக்கும் மட்டுமே பயன்தருவது. காலத்தை முன்கொண்டுச் செல்லும் அகழாய்வு முடிவுகளும், தொல்பொருட்ச் சான்றுகளும் மட்டுமே மேலே அனுமானமாக முன்வைக்கப்பட்டக் கருத்துக்களை மெய்யாக்கும்.

சங்க காலத்தின் கால வரையறையில் அறிஞர்கள் தொடர்ந்து மாறுபட்டக் கருத்துக்களுடனே உள்ளனர். கி.மு.5000-ல் தொடங்கியது எனக் கட்டற்றுச் செய்யப்பட்டக் காலவரையறைகளை மறுத்து அறிவியல்பூர்வமாக காலவறையரை முதலில் வெளிப்படுத்திய கே.என்.சிவராசப்பிள்ளை முதற்கொண்டு ச.வையாபுரிப்பிள்ளை, கமில்சுவபில், வ.அய்.சுப்பிரமணியம், மயிலை.சீனி. வேங்கடசாமி, இரா.நாகசாமி, நடன.காசிநாதன், ஏ.சுப்பராயலு, கா.இராஜன், வி.பி.புருசோத்தமன், பத்மஜாரமேஷ், பொ.மாதையன், ஆகியோர் இலக்கிய அகச்சான்றுகள், புறச்சான்றுகள், தொல்பொருட் சான்றுகள், வெளிநாட்டார் குறிப்புகள், அயல் இலக்கியங்கள், காசியல், தொல்லெழுத்துக்கலை, சடங்குகளின் அடிப்படைத் தரவுகள் என பல முறைகளைக் கொண்டு தற்காலம் வரை பலரும் இக்காலகட்டத்தை வறையறுக்க முயன்று வருகின்றனர்.

இந்த ஆய்வுகளில் இருந்து உடனடியாகத் துல்லியமான காலகட்டத்தை அடையமுடியாவிட்டாலும் சங்க காலத்தின் தொடக்க ஆண்டுகளை மு.பொ.ஆ.400 பிற்பட்டுத் தள்ள முடியாத தொன்மையை அடைந்துள்ளோம். பொ.ஆ.250-300 இல் சங்ககாலம் முடிவுற்றது என்ற வறையரை தற்போது எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

தகடூர் – இலக்கியச் சான்று

சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான ‘பதிற்றுப்பத்து’ தொகுப்பில் எட்டாம் பத்தின் ஆசிரியர் அரிசில் கிழார் பெருஞ்சேரல் இரும்பொறை குறித்துப்பாடிய எட்டாம் பாடலில், (பா: 78, வ 8-9)

“வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்

வில்பயில் இறும்பின் தகடூர் நூறி

-என்ற விவரிப்பில் தன் தகடூர் பெயர் முதன் முதலில் சொல்லப்படுகிறது.

அடுத்ததாக, எட்டாம்பத்தின் பதிகப்பாடலில் ‘தகடூர்’ பெயர் குறிப்பிடப்படுகிறது. (பதி.பற்.பதி:வரி:9). இப்பதிகப்பாடலைப் பாடியவர் யார் என்ற விவரம் அறியக்கூடவில்லை. எட்டாம் பத்தின் முன்வைப்பாக இப்பதிகப்பாடல் இடம் பெற்றுள்ளது. இதில்,

‘- – - -       அடுகளம் வேட்டுத்

துகள்நீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத்

தகடூர் எறிந்து நொச்சி தந்தெய்திய

- – - – ’

இப்பாட்டின் வார்த்தைகளைத் தொடர்ந்தே சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை “தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அடையுடன் வரலாற்று ஆசிரியர்களால் சிறப்பித்து அழைக்கப்படுகிறான்.

அதியமானுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே நடைபெற்ற போர் குறித்த செய்திகளை விவரிக்கும் நூல் ‘தகடூர் யாத்திரை’. இந்நூலுக்கு ‘தகடூர் மாலை’ என்ற பெயரும் உண்டு. (மயிலை சீனி. வேங்கடசாமி,2003), தகடூரின் பெயரை மூன்றாம் முறையாக இந்நூலின் தலைப்பில்தான் அறிய வருகிறோம்.

சங்க இலக்கியத்தில் இந்த மூன்று சான்றைத் தவிர வேறு சான்றுகள் இல்லை. தகடூர்யாத்திரை சங்க நூல்களில் ஒன்று என்ற கணக்கின் அடிப்படையிலானது இந்த எண்ணிக்கை. மேலும், அரிசில்கிழார் பாடிய புறநானூறு 123 வது பாடலின் கொளு ‘அதியமான் தகடூர் பொருது வீழ்ந்தான் எழினி’ என குறிப்பிடுகிறது. கொளு சூத்திரங்கள் இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. கொளு சான்றை கொளு எழுதப்பட்டக் கால கட்டத்தில் ‘தகடூர்’ பெயர் வழக்கில் இருந்ததை சுட்டி நிற்கிறது எனக்கொள்ளலாம். .

பக்திஇலக்கியக் காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பொ.ஆ.9ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் வைப்புத்தலமாக வைத்துப்பாடிய பாடல் ஒன்று தகடூர் பெயரை குறிப்பிடுகிறது. (சுந்தரமூர்த்தி, தேவாரம்-பொது, திருநாட்டுத்தொகை). இது சங்ககால சோழ மன்னன் கோச்செங்கண்ணன் எழுப்பிய ‘கோச்சேங்கண்ணீஸ்வரர் கோயில் குறித்துப் பாடியது எனக் கருதப்படுகிறது.

“வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்

கூழை ஏறுகந்தான் இடங்கொண்டதும் கோவலூர்

தாழையூர் தகடூர் தக்களூர் தருமபுரம்

வாழைக்காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே”.

(இப்பாடலில் குறிப்பிடப்படும் தகடூர் வேறு தகடூர் என்று அறிஞர்களிடையே கருத்துமுரண் உண்டு, தகடூர்- தகட்டூர் என்ற பாடபேதமும் இப்பாடலுக்கு உண்டு). இச்சான்றுகளைத் தவிர தகடூர் பெயரைக் குறிப்பிடும் வேறு சான்றுகளைக் இலக்கியங்கள் வழி காணமுடியவில்லை.

இவ்விலக்கிய ஆதாரங்களைத் தவிர சான்றுகளற்று மறுபரிசீலனை செய்ய வேண்டிய பல கருத்துக்கள் பலரால் எழுதப்பட்டுள்ளன. ஆதாரமற்ற அவற்றை புறக்கணிக்கவாவது அவற்றை அறிந்துகொள்வது அவசியம். இது தகடூர் வரலற்றின் மீது கட்டப்பட்டப் பிரச்சனைகளைக்களைய உதவும்.

 1. தகடூர் என்ற பெயர் அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் பயின்று வருகின்றது.
 2. அதியமான் நெடுமான் அஞ்சியைச் சிறப்பித்துப்பாடிய அவ்வையார் தம்பாடல்களில் தகடூரைச் சிறப்பித்துப்பாடியுள்ளார்.
 3. ‘தடங்கமலத்தகடை’ என்ற பெயரை தகடூர்யாத்திரை நூல் ‘தாமரைப்பூவின் புறவிதழைப்போன்ற ஊர்’ என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறது.

தகடூர் – கல்வெட்டுச் சான்று

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், பாப்பம்பாடி (இருளப்பட்டி) என்ற ஊரில் உள்ள பொ.ஆ.5 ஆம் நூற்றாண்டு நடுகல்கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/61) ‘தகடூர்’ பெயரைக் கொண்டிருக்கிறது, இதுவரை அறியப்பட்ட கல்வெட்டுகளில் தகடூர் பெயரைத் தரும் பழைமை வாய்ந்த கல்வெட்டு இதுவே. மேலும், பொ.ஆ.8-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1972/16), பொ.ஆ.8-9 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/127), பொ.ஆ.10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/140) பொ.ஆ. 1010 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/78), பொ.ஆ. 1036 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/85), பொ.ஆ. 1045 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/29), பொ.ஆ. 1017 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/9-B), பொ.ஆ. 1041 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/9-A), பொ.ஆ.11 ஆம் நூற்றண்டு கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1972/38), பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/149), பொ.ஆ. 1073 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/84), பொ.ஆ. 1051 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/9-A), பொ.ஆ. 1227 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/93) பொ.ஆ.1249 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/86), பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டு (த.தொ.ஆ.து.எண்:1973/111), (த.தொ.ஆ.து.எண்:1974/106), (த.தொ.ஆ.து.எண்:1974/107), (த.தொ.ஆ.து.எண்:1974/149) மற்றும் (த.தொ.ஆ.து.எண்:1973/120) கல்வெட்டுக்கள், பொ.ஆ. 1369 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/77-A) போன்றவை ’தகடூர்’ பெயரை வழங்குகின்றன.

பொ.ஆ. 1191 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/150) ’தகடு’ பெயரை வழங்குகின்றது.

பொ.ஆ. 1244 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/92), பொ.ஆ. 1296 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/137) பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டு (த.தொ.ஆ.து.எண்:1973/54), (த.தொ.ஆ.து.எண்:1974/87), பொ.ஆ. 1421 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/169) போன்ற கல்வெட்டுக்கள் ‘தகடை’ என்ற பெயரை வழங்குகின்றன.

பொ.ஆ.13-14 ஆம் நூற்றாண்டு (த.தொ.ஆ.து.எண்:1973/28) ‘தகடா’ (தராயன்) பெயரை வழங்குகின்றது.

பொ.ஆ. 1198 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/174), பொ.ஆ.14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் (த.தொ.ஆ.து.எண்:1974/129), (த.தொ.ஆ.து.எண்:1973/39) பொ.ஆ. 1441 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1973/121), பொ.ஆ. 1430 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1972/122), பொ.ஆ. 1415 கல்வெட்டு (த.தொ.ஆ.து.எண்:1974/121) போன்ற கல்வெட்டுக்கள் ‘தகட’ என்றும் குறிப்பிடுகின்றன.

கன்னடமொழி கல்வெட்டுகளில் ‘தகடூரு’ எனக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. பொ.ஆ. 892 (SII.VII.No: 530), பொ.ஆ. 929, (SII.IX p.I No: 23) கல்வெட்டுக்கள் தகடூரு என குறிக்கின்றன. தகடூரு என்ற வழக்கு தகடூர் என்பதன் நேர் கன்னட வழக்காகும்.

இக்கல்வெட்டுச் சான்றுகள் தகடூர் என்ற பெயரானது சங்க காலம் முதல் 12 ஆம் நூற்றாண்டு சோழர்கள் ஆட்சி வரை பல்லவர் ஆட்சிக்காலம் உட்பட எவ்வித மாற்றமும் இன்றி வழக்கில் இருந்ததை உறுதி செய்கின்றன. 9-10 ஆம் நூற்றண்டின் கன்னட கல்வெட்டுக்களும் கன்னட வழக்கைக் கொண்டிருக்கின்றனவே தவிர மருவடையவில்லை என்பதை உணர்த்துகின்றன. 12ஆம் நூற்றண்டின் இறுதியிலும், 13 ஆம் நூற்றண்டில் ஹொய்சாலர் ஆட்சிக்காலத்தில் தான் தகடு, தகட என மருவியப் பயன்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

14-15 ஆம் நூற்றாண்டு விஜயநகர ஆட்சிக் காலத்தில் தகடை என்ற பயன்பாட்டை அறியமுடிகிறது.

தகடூர் – ஊரின் பெயராகவும் நாட்டின் பெயராகவும் விளங்குவது எப்படி

‘தகடூர்’ என்ற பெயர் வழக்கின் துவக்கத்திற்கு நிலவியலே அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது. தகடூர் ஒரு ஊரின் பெயராகவும் நாட்டின் பெயராகவும் விளங்கியது எப்படி என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியமாக உள்ளது.

தகடூர் நிலவியல் அடிப்படையான காரணப்பெயர் என்பது தகடூர் நகரத்திற்குப் பொருந்துவதாக உள்ளது. ஆனால் இந்த நிலவியல் அடிப்படை தகடூர் நாட்டிற்குப் பொருந்துவதாக இருக்க முடியுமா? தகடூர் நாட்டின் நிலவியல் அடிப்படைகள் இதற்குப் பொருந்துவதில்லை.

இந்த நிலையில் நிலவியல் அடிப்படையில் நாட்டின் பெயர் அமைந்துள்ளதா? முன்னுதாரணம் உண்டா? என்றால், தகடூர்ப்பகுதியிலேயே விடையுள்ளது. ‘புறமலைநாடு’. புறத்தே மலை சூழ்ந்த நாடு என்ற பொருளில் புறமலைநாடு பெயர் உள்ளது. இப்பெயரை 8ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றண்டுக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது.

ஒரு ஊர்ப்பெயரை அடியாக்கொண்டு அல்லது தலைநகரின் பெயரைக் கொண்டு நாட்டின் பெயர் வைக்கப்பட்டுள்ளதா, உருவாக்கப்பட்டுள்ளதா? உள்ளது. பிற்காலத்தில் ‘விஜயநகரம்’. சங்க காலத்தில் சில உதாரணங்களைக் காணமுடிகிறது. கூற்றம் என்ற சொல் நாடு என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. ஊரின் அடிப்படையில் கூற்றம் அழைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டவை மிகச் சிறியபரப்பளவைக் கொண்டவை. தகடூர் நாட்டுக்கு இது பொருந்துமா என ஆலோசிக்கவேண்டியுள்ளது. பிற்கால உதாரணமான விஜயநகரம் இதற்கு விடை தருகிறது. விஜயநகரம் என்ற நகரை உருவாக்கி அல்லது ஒரு நகரை கைப்பற்றி அதற்கு விஜயநகரம் எனப்பெயரிட்டு அண்டை, அயல் பகுதிகளை வென்று மிகப்பெரிய நாடாக ஆன வரலாறு தகடூர் நாட்டுக்கு மிகச்சரியாகப்பொருந்தும் எனலாம்.

ஆனால் சங்க கால அரசுகள் உருவாக்கம் அரசகுடிப்பெயர்கள் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, ஓய்மாநாடு, தொண்டை நாடு,… இந்த வகையில் அதியர்நாடு என வழங்கப்படாமைக்கு வேறு காரணமும் இருந்திருக்கக்கூடும் என்பதை வலியுறுத்துகிறது.

சங்க இலக்கியத்தில் ‘தகடு’ சொல்லாட்சி முப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை முன்பு எடுத்துக்காட்டப்பட்டது. ‘பூவின் புற இதழ்’ என்ற பொருளொடு ஆலோசித்த காரணங்கள் விவரித்து அதன் காரணப்பொருள் மேலே விவரிக்கப்பட்டது. ‘தகடு’ சொல்லாட்சியின் பிற இரு பொருள்களான ‘தகட்டு வடிவப்பொருள்’ ‘பொன்’ ஆகியன குறித்து ஆய்வதும் தகடூர் ஊர்ப்பெயராய்வுக்கு அவசியமாக உள்ளது. அது புதிய பொருளை வழங்குகிறது.

தகடு என்பது உலோகப் பொருளைத் தரும் ஒரு சொல்லாகும். தட்டுபோல வார்த்து எடுக்கப்பட்ட எல்லா உலோகப்பொருளையும் தகடு சொல் சுட்டுகிறது. மாந்தரினத்தின் உலோகப் பயன்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்ட உலோகப்பண்பாட்டின் நிரல்படி, தென்னிந்தியப் பண்டைய வரலாறு செம்பு, வெண்கலப் பண்பாடுகளைக் கடந்து வராமல் நேரடியாக இரும்பு உலோகப்பண்பாட்டிற்கு வந்தது என்பர். (புருஸ்புட்:) இங்கு கிடைக்கும் செம்பு, வெண்கலப் பொருட்கள் அவ்வவ் உலோகப்பண்பாடுகளை அடையாளப்படுத்தாமல், இரும்புக்காலத்தின் உடன் வெளிப்பாடாக உள்ளதும் மனங்கொள்ளத்தக்கது.

எனில், இங்கு தகடு இரும்பு வார்ப்பையே சுட்டுகிறது. தகடூர் நாட்டின் இரும்பு வளம்/கனிம வளம் குறித்துப் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளது. (த.பார்த்திபன், 2009, பக்:191-194). இன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட, குட்டூர் அகழாய்வும் தகடூர் நாட்டில் இரும்பு நாகரிகத்தின் தொன்மையை வெளிச்சமாக்குகிறது. கஞ்சமலை இரும்பும், எஃக்கின் தரமும் உலகப்புகழ் வாய்ந்தது. பெரிய இலட்சியத்துடன் இந்தியா மீது பொ.ஆ.326-இல் படையெடுத்த மாவீரன் அலெக்சாந்தருக்கு, சிந்துப்பகுதியில் புருசோத்தமனால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களில் குறிப்பிடத்தகுந்தது 38 பவுண்ட் எடையுள்ள எஃகு. இந்த எஃகு தகடூர் நாட்டின் கஞ்சமலையின் உற்பத்தி. மு.பொ.ஆ 4-ஆம் நூற்றண்டைச் சேர்ந்தவன் அலெக்சாந்தர். இதேகால கட்டத்தில் தகடூர் கஞ்சமலை எஃகு, கிரீஸ், ரோம்-இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்நிகழ்வுகளின் காலகட்டத்தில் தகடூரை ஆட்சிப்புரிந்தவர்கள் அதியர் மரபினர். இது இரும்புத் தொழில் நுட்பத்தில் அதியர் மரபினரும் தகடூர் நாடும் பெற்றிருந்த சிறப்பை அடையாளமாக்குவது.

வே.சா. அருள்ராசு (2000: பக்:9-10) காட்டும், “கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்ரிக்கா, கிரேக்கம் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு இரும்பு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என கே.என்.பி. ராவ் கூறுகிறார்”; “பி.கே.குருராஜ ராவ் கி.மு.450 ஆம் ஆண்டில் க்டெசியஸ் (Ktesias) தனது குறிப்பில் பெர்சியன் அரசனுக்கு இந்திய உருக்கு வாள்கள் பரிசளிக்கப்பட்டதாகவும், தென்னிந்தியர்கள் கி,மு.500 ஆம் நூற்றாண்டிலே உருக்கு செய்யும் தொழிலில் சிறந்து காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்”; “வார்மிங்டன் தனது நூலில் இந்தியாவிலுள்ள எஃகில் இருந்து நல்ல உறுதிவாய்ந்த வாள்கள் செய்யப்பட்டன, அவை   மேலும் சில ஆதாரங்கள் கி.மு.450 ஆம் ஆண்டில் க்டெசியஸ் காலத்தில் மிகவும் பெரும் புகழுடன் விளங்கின; இந்தக் கட்டத்தில் இந்தியாவிலுள்ள இரும்பு மற்றும் எஃகு எகிப்து நாட்டு வாணிபத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது என்றும் கூறிச்செல்கிறார்”.

சர்.ஜே.ஜ. வில்கின்சன் போன்ற அறிஞர்கள், “இரும்பிலிருந்து எஃகு செய்யும் முறை தமிழ்நாட்டார்க்குத் தவிர வேறு யாருக்கும் தெரியாது” (சோமலே, (மே.கோ), 1961,ப.30) சேலம் மாவட்டம்) என்று தெரிவிக்கும் கருத்தும், உலகப்புகழ் மிக்க உலோகத்தொழில் கலையியல் வல்லுநர் பேராசிரியர் எம்.கொலாந்து அவர்கள் “ஐரோப்பாவில் இரும்புத் தொழில் தொடங்குவதர்க்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில் செய்யப்பட்டு வந்ததாக” தெரிவிக்கும் கருத்தும், இவர் இரும்பின் உற்பத்தி தெரிவிக்கும் கருத்தான “அங்கு (தென்னிந்தியாவில்) இரும்பை உருக்கிக் காய்ச்சுவதைத் தற்செயலாகவே ஆதிகாலத்திய மக்கள் கண்டறிந்திருக்க வேண்டும்; கற்கருவிக்கால மக்கள் பெரிதும் குன்றுகளிலும் மலைச்சரிவுகளிலும், வளமிக்க செறிந்த காடுகளின் ஓரங்களிலும் வாழ்ந்தார், இரும்பினைக் கண்டறிந்த, பிறகே ஆதி மனிதர் காட்டினைத் தம்முடைய வாழ்விடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதுவதே பொருத்தமாகத் தொன்றுகிறது. இரும்புக் கருவிக் கால நாகரிகமே குன்றுகளில் வாழ்ந்த மக்களைக் காடுகளில் சென்று வாழுமாறு தூண்டியது; மிகப் பழைய காலம் முதல் இரும்பைப் பயன்படுத்திவருவதற்குரிய தடயங்கள் இந்தியாவில் கிடைத்துள்ளன. மேலும் துருப்பிடிக்காத வகையில் இரும்பைச் செய்யும் சிறப்பு மிக்கதோர் முறையையும் அவர்கள் அறிந்திருந்தனர் (வரலாற்றுக்குழு,1975,ப.126)*அ,கு:2 என்ற கருத்தும் உலகில் இரும்புத் தொழில்- இரும்பு நாகரிகத்தின் துவக்கத்தை மிகச்சரியாக அடையாளப்படுத்துவன.

அதுபோலவே “இன்றைக்கு 4000 வருடங்களுக்கு (மு.பொ.ஆ.2000) முற்பட்ட எகிப்த் நாட்டில் உள்ள ‘பிரமிட்’ கட்டடங்கள் கட்ட பயன்பட்ட உளி, சுத்தியல் போன்ற கருவிகள் சேலம் கஞ்சமலை இரும்பால் செய்யப்பெற்றவை” என்ற எஃகு நிபுணர் சே.எம். கீத் மற்றும் சர். ஜே.ஜ. வில்கின்சன் அவர்களின் கூற்றும் தகடூர் நாட்டில் இரும்பு நாகரிகத்தின் பழைமையை அடையாளப்படுத்தும் ஒன்று. மற்றொரு அறிஞர் ஹெட்ஃபில்ட் குறிப்பிடும் பொது “எகிப்தியர்கள் எஃகில் கருவிகள் செய்வதற்குரிய அறிவையும், கடின இரும்பைத் தயாரிப்பதற்கான அறிவையும் இந்தியர்களிடமிருந்து கற்றார்கள்” என்பார். (வே.சா. அருள்ராசு, 2000:ப.10) இவையே இந்திய-தமிழகத்தின் இரும்பு நாகரிகத்தின் தொன்மையையும் வெளிப்படுத்துவது ஆகும். உலகின் பிற நாடுகளில் எஃகு இன்னதென்பது குறித்து அறியாத காலத்தில் தகடூர் நாட்டின் பகுதியாகிய சேலம் கஞ்சமலைப் பகுதியில் தயாரிக்கப்பட்ட எஃகு உலகில் அன்று அறியப்பட்ட மிகச் சிறந்த மேற்கு, மற்றும் சின்ன ஆசியப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பது கொண்டு பழந் தமிழரின் –தகடூர் நட்டின் -தொழில் நுட்பத் திறனின் பெருமையும் செழிப்பும் நன்கு வெளிப்படுகிறது.

சங்க காலத்தின் மத்திய கால கட்டத்தைச் சார்ந்த பெரிப்புளுஸ் மற்றும் பிளினி போன்றவர்களும் தகடூர்ப் பகுதியில் (சேலத்தில்) இருந்து எஃகு என்னும் இரும்புப் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளர் என்பது, தொன்மையான காலத்திலிருந்து தொடர்ந்த ஏற்றுமதி வாணிபத்தின் இடையறாத செயலின்தொடர்ச்சியின் பதிவுகளே எனலாம். பெரிப்புளுஸ்-ன் ஆசிரியார் முதலாம் முன்பொது நூற்றாண்டைச் (1st Cen.BCE)சேர்ந்தவர். இவர், இரும்புத் தாதுக்கள் இந்தியாவின் எல்லா இடங்களிலும் கிடைப்பதாகவும், நல்ல தரமான எஃகு இரும்பு சேரர்களால் தயாரிக்கப்பட்டு ஆட்டுத்தோல் மற்றும் இறைச்சியுடன் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். இக்கருத்தை இரண்டு விதமாக அணுகவேண்டியுள்ளது. 1. சேர நாட்டுப்பகுதியில் கிடைத்த தரமான எஃக்கை சேரர்கள் ஏற்றுமதி செய்தார்கள் என்பது. 2. சேரர்கள் தகடூரை வென்ற பிறகு, கஞ்சமலைப்பகுதியிலிருந்து தரமான எஃக்கை ஏற்றுமதி செய்தார்கள் என்பது.

தகடூர் நாட்டில் இருந்து பெற்ற எஃகினால் உலகப் புகழ்பெற்ற டமாஸ்கஸ் வாள் (Damascus Sword) ஐரேப்பாவில் செய்யப்பட்டது என்பதும் (F.J.Richarts, Part-II,p.27), “அரேபியாவில் இருந்த பழைய இரும்புத் தொழிற்சாலை ஒன்றுக்கு, இந்தியாவிலிருந்தும், பெர்சியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டு இரும்புத் தொழில் நடந்தேரியதாகவும், மேலும் சிரியா நாட்டில் குறிப்பாக டமாஸ்கஸ் என்னும் முக்கிய நகரத்திலும் அதன் மேற்கிலும் அராபியர்கள் சிசிலி மற்றும் ஆப்பிக்காவில் உள்ள இரும்புச் சுரங்கங்களில் வேலை பார்தபோது இரும்பினை மேலும் சீர் செய்யும் நேக்கில் இந்தியாவுக்கு அனுப்பினார்கள்” என்ற (R.J. Forbes, Matallurgy in Antiquity, (1950), (மே.கோ)அருள்ராசு). கருத்தும் குறிப்பிடத்தகுந்த வரலாற்றுச் செய்திகளகும்.

இவ்வாறு இலக்கிய, வெளிநட்டார் குறிப்புகள் மற்றும் தொல்பொருள் ஆதாரமாக உள்ளவை இந்திய இரும்பு நாகரிகத்தின் வரலாற்றை மறுபரிசீலனையை செய்து திருத்தி எழுதவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன.

இதே காரணத்தினால் தகடு என்ற ‘கரும்பொன்’ என்று அறியப்பட்ட இரும்பு வளம், இரும்பு தொழில் – இரும்பு வணிகத்தின் காரணமாக தகடூர் பெயர் நாட்டின் பெயராக அமைந்திருக்கலாம் எனலாம்.

அடிக்குறிப்புகள்:

*1: இந்த வரையறை ‘ரிக் வேதம்’ வாய்மொழியாக உருவான தொடக்காலத்தில் இருந்து, அதாவது ஆரியர் சிந்துப்பகுதியில் நுழைந்த மு.பொ.ஆ. 1500 காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது. ஆனால் வேதங்கள் பொ.ஆ. 14-15 ஆம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவாக்கம் பெற்றன. இங்கு 2000 ஆண்டு வாய்மொழி மரபு எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வு, விமர்சனம் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தென்னிந்தியாவின் முதல் எழுத்துப்பூர்வ ஆவணமான ‘தொல்காப்பியம்’ தன் காலத்திற்கு முன் வழக்கில் இருந்த மொழி, பண்பாட்டு மரபுகளை தன் அளவில் மிக நேர்மையாக வெளிப்படுத்துகிறது. ‘என்ப, மொழிப, என்பனார் புலவர், மொழிந்தனரே, அறைந்தனரே’ போன்ற பல சொற்களால் மிகச்சரியான அகச்சான்றா அவற்றை குறிப்பிடுகிறது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் படி தொல்காப்பியத்தின் காலத்தையே வரையறை செய்யாத நிலையில், என்ப, மொழிப, என்பனார் புலவர், மொழிந்தனரே, அறைந்தனரே போன்ற அகச்சான்றுகளின் காலத்தை எப்போது வரையறை செய்து தமிழ் மரபின் தொன்மையை/ காலப்பழைமையை வரையரை செய்யப்போகின்றோம்.

எமது அடுத்த தலைமுறை சிந்திக்கட்டும்: “ஆய்வு முடிவுகளிலும், விவாதங்களிலும், விமர்சனங்களிலும் கருத்து முரண்கள் ஆரோக்கியக்கிமானவை. மேலேடுத்துச்செல்ல பயனாகுவன. ஏனே எம் முன்னொரும், யாமும் தலைமுறைகளாகத் தொடர்ந்து இவற்றை நிராகரிக்கப் பழகிக்கொண்டோம்; தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறோம்”.

*2: தகடூர் நாட்டில் (தருமபுரி & கிருஷ்ணகி மாவட்டங்கள்) கிடைத்த தொல்பழங்கால பாறை மற்றும் குகை ஓவியங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்துடன் இணைத்துப் பார்க்கப்படுபவை. பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் கொண்டு இவை மு.பொ,ஆ 1000 முற்படாதவை என்ற ஒரு கணிப்பு உண்டு என்பதை மறக்கவியலாது. தகடூர்ப்பகுதி ஓவியங்களில் மிகுதியாகப் பயின்றுவரும் சிந்துவெளி எழுத்துக்களையொத்த எழுத்துக்களும், அவற்றுடன் குறியீடுகள் கலந்து பயின்றுவரும் நிலையும் எழுத்துருக்களின் தோற்றம் வளர்ச்சி பரவல் ஆகியவற்றின் கால கட்டத்துடன் இணைத்து ஆய்வு செய்ய புதிய பல வாய்ப்புக்களை வழங்குகின்றன. இக்கருத்துருவின் அடிப்படையில் தகடூர் நாட்டின் தொல்பழங்கால பாறை மற்றும் குகை ஓவியங்களின் காலப்பழமையை முன்கொண்டு செல்ல முடியும். பெருங்கற்காலச் சின்னங்களில் கிடைக்கும் ஓவியங்களும், பாறை மற்றும் குகை ஓவியங்களும் சமகாலத்தின என கணிக்கும் போக்கு மறுபரிசீலனைக்கு உரியதே.

உசாதுணை நூல்கள்:

 1. இளங்குமரனார், “தகடூர் யாத்திரை –மூலமும் உரையும்” (1930) திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
 2. இளங்குமரனார், “தகடூர் யாத்திரை (மூலமும் உரையும்)’’, (2009) வளவன் பதிப்பகம். சென்னை.
 3. தி.சுப்பிரமணியன், “தருமபுரி நடுகள் அகழ்வைப்பகம்” (2010), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
 4. பதிற்றுப்பத்து.
 5. மயிலை சீனி.வேங்கடசாமி, ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ (2003), சாரதா பதிப்பகம், சென்னை.
 6. ரா.பி.சேதுப்பிள்ளை. “தமிழகம் ஊரும் பேரும்”, (2008), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
 7. சுந்தரமூர்த்தி நாயனார், தேவாரம் – பொது, திருநாட்டுத்தொகை
 8. நா.மார்க்சிய காந்தி, தமிழக வராலாற்றில் அதியர் மரபு.1998), அமுதன் பதிப்பகம், சென்னை,
 9. இரா.நாகசாமி, தருமபுரி கல்வெட்டுக்கள், முதல் மற்றும் இரண்டாம் தொகுதி, (1975), தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.
 10. SII, VOL-Nos: VII, IX.
 11. த.பார்த்திபன், ‘சங்க காலத் தமிழகமும் அதியர் மரபினரும்’ (2009), ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி,
 12. சோகலே, சேலம் மாவட்டம், (1961), பாரி நிலையம், சென்னை,
 13. வே.சா. அருள்ராசு, பழந்தமிழகத்தில் இருப்புத் தொழில், (2000), தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சை.
 14. வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டு வரலாறு, தொல்பழங்காலம், (1975), தமிழ்நாட்டு அரசு வெளியீடு, சென்னை.
 15. W.H. Schoff, (Tr), The Peripulus of the Erythrean Sea, (1912), Longmans, Green, and co.,NewYork.
 16. H.Le Fanu, A Manual of Salem District in the Presidency of Madras, (1883).
 17. F.J.Richarts, Salem District Gazetteer, Vol-1; part- I & II (1918),
 18. K.Nileelakanda Sastri, Foernign Notes on South India, University of Madras, Chennai.

***

பகடு புறந்தருநர் பாரமோம்பி

குடி புறந்தருகுவை யாயினின்

அடி புறந் தருகுவ ரடங்காதோரே .,

 

என்ற புறப்பாடல் போர்ப்படையைக்காட்டிலும் வேளாண் படைச்சிறப்பையும் ஏர் பிடித்து உழும் வேளாளனின் வெற்றியே ஓர் மன்னனின் வெற்றி என்றும் போற்றுவதைக் காணலாம்.

1.   நீர் நிலைகளைப் பெருக்கி உணவு உற்பத்திக்கு வழிதேடும் மக்களே அணைவரிலும் சிறப்பு மிக்கவராய் கருதப்பட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பர். அதற்கேற்ப உணவு என்பது நிலமும் நீரும் இணைந்தது. அத்தகு நிலத்தின் பிள்ளைகளாய், வளமைக்கு வித்திடுபவராய் போற்றி புகழப்படும் இவர்கள் வேளாளர் என அழைக்கப்பட்டனர். ஆட்சிபுரிகின்ற மன்னர்களுக்கு பக்க பலமாக திகழ்ந்தவர்கள் வேளாளர்கள். இவர்கள் பல கிளைத்தொழிலில் ஈடுபட்டனர்.

2. நிகண்டுகள் இவர்கள் ஆறு வகையான தொழில்களை மேற்கொண்டதாக சுட்டுகின்றது.

உழவுத்தொழிலை அடுத்து வணிகத்திலும் பங்கேற்றனர். பாண்டியர், சோழர், போன்ற பேரரசர்களின் அரசவைகளில் உயர் பதவிகளையும் வேளாளர்கள் வகித்தனர்.

போர்த் தளபதியாகவும் பணியாற்றினா.; இவ்வாறு பல்லாற்றானும் சிறப்பு பெற்று பல தொழில்களைக் கற்றறிந்தவர்கள் வேளாளர்கள். நாகரீக உலகில் முதன்முதலாக தோன்றிய தொழில் வேளாண் தொழிலே. இத்தகைய வேளாளரில் உழவுத் தொழிலையே தங்களது முழுநேரத் தொழிலாகவும், அதற்கு பயன் படுத்தப்;படும் ஏர்கலப்பையையே தங்களது குல தெய்வமாகவும் வைத்து போற்றி புகழ்ந்து வந்த ஒரு பிரிவினரை சித்ரமேழிநாட்டார் என அழைக்கப் பட்டனர்.

 

சித்ரமேழி நாட்டார் :   பூமி தேவியின் மக்கள் நாங்கள் என்றும் ஏரையே தெய்வமாகக் கொண்டவர்களை சித்ரமேழி நாட்டார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் 79 நாடுகளில் வாழ்ந்தனர் என்றும் தமிழகத்தில் சீரும் சிறப்புமாய் திகழ்நதனர். இவர்கள் அறம் வளர, கற்பமைய, புகழ் பெருக மனு நெறி தலைக்க நல்லவற்றையே நடைமுறைப்படுத்துபவர்கள் என கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

 

3. சித்ரமேழி நாட்டார் மெய்க்;கீர்த்தி : மன்னர்களுக்கு அமைக்கப்படும் மெய்க்கீர்த்தியைப் போன்றே சித்ரமேழி நாட்டார்களுக்கும் மெய்க்கீர்த்தி அமைத்து

கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சோழ மன்னன் ராசாதிராசன் காலத்தில் திட்டக்குடியில் வெட்டப்பட்ட கல்வெட்டில் அரசனின் மெய்கீர்த்திக்குப் பின்னர் இவர்களது புகழ்பாடும் மெய்க்கீர்த்தி வருகின்றது.

“ ஸ்ரீமத் பூமி சபுத்ஸ்ய

சாதுர்வர்ணஸ குலோத்பவம்

சர்வலோக   கிதார்த்தாய

சித்ர மேளஸ்ய சாஸனம்’’ எனத் தொடங்குகின்றது.

 

4. சித்ர மேழி நாட்டாரின் மெய்கீர்த்திகளில் மூன்று மாறுபாடுகள் காணலாம். சில மெய்க்கீர்த்திகளில்

மேழியை தெய்வமாகவும், மேழியை பிடித்து உழுபவர்கள் என்றும் பொருள்பட உரைக்கின்றன. சிலவற்றில் பசும்பையை அதாவது பொன் பொருளை வைத்து உழவை துவக்குபவர்கள்   என குறிக்கின்றன. இவர்களை வணிகர்களுடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.   நன்கு உயர்ந்த   நிலையை அடைந்தவர்கள் அறங்கூறும் தொழிலைக் கைக்கொண்டு நீதி பரிபாலனம் செய்யத் துவங்குகின்றனர். இவர்களை பெரியநாட்டார் வகையில் கொள்வது சிறப்புடையதாகும். எனவே சித்ரமேழி பெரியநாட்டார் என்பது சாசன அடிப்படையில் ஏர்கலப்பை, பொன் பொருள் மற்றும் அறம் கூறும் செயல் திறம் படைத்தோர் என்ற முப்பரிமானத்தையும் பெற்றுத் திகழ்ந்தமையையும் நன்கு உணர்த்துகின்றன.

 

5. கல்வெட்டுக்களில் சித்ர மேழி நாட்டார் :   சித்ர மேழி நாட்டார்; அவர்தம் புகழை எடுத்துரைக்கும் வண்ணம் தெளிவாக உணர்துகின்றது திருக்கோயிலூர் பெருமாள் கோயில் கல்வெட்டு.

 

6. “ பூமாதேவிக்கு மக்களாகி நிகழச் செந்தமிழ் வடகலை தெரிந்துணர்ந்து, நிதிகெட்டு, நிபுணராகி, நறுமலர் வாடாத திருமகள் புதல்வர், எத்திசைக்கும் விளக்காக இன்சொல்லால் இனிது அளித்து, வன் சொல்லால் அறம் கடிந்து   அணைத்து தேவர்களும் தங்களது   அருளை   வழங்க எத்திசை   மகளிரும் இனிதே வீற்றிருக்க தெங்கும,; பலாவும், தேமாஞ் சோலையும, வாழையும,; கமுகும், வளர்கொடி முல்லையும், பூவையும், கிள்ளையும் கெழுமி வாட்டமின்றி கூட்டம் பெருகி… என்று தங்களது புகழைக் கூறி அடுத்து சித்ர மேழியே தெய்வமாகவும் செம்பொன் பசும்பையே வேலியாகவும் கொண்டவர் என்றும் உத்தமநிதி என்றும் உயர் பெருங்கீர்த்தி முத்தமிழ்மாலை முழுவதுமுணர்ந்த சித்ரமேழி பெரியநாட்டார் “ என பகருகின்றன. சோழர்கள் காலத்தில் இத்தகு பெரும் புகழைப் பெற்றுத் திகழ்ந்திருந்தனர். எனவே சித்ரமேழி நாட்டார் நிலத்தில் எத்தகைய ஈடுபாட்டுடன் பயிர்த்தொழிலை செய்துள்ளனர் என்பதையும் மேழியை தெய்வமாக போற்றியதையும் இவை தெளிவுபடுத்துகின்றன. குலோத்துங்கசோழனின் கல்வெட்டில் பெரியநாட்டார் கூடிய இடத்தை சித்ரமேழி மண்டபம் என குறித்துள்ளனர்.

 

7. தகடூர் நாட்டில் சித்ரமேழி நாட்டார் :     தகடூர் நாட்டிலும் சித்ரமேழி நாட்டார் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது   இங்குள்ள   வட்டாரக்   கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றன. சித்ரமேழி நாட்டார் குறித்து ஓசூர், ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள   கல்வெட்டுக்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

 

8. ஓசூர் நகரின் கிழக்கே அமைந்துள்ள ஓர் கற்பாறையில் காணப்படும் கல்வெட்டு பல சிறப்பான செய்திகளை எடுத்துரைக்கின்றன.   இக்கல்வெட்டில் ஒசூரை செவிடபாடி என்றும் இப்பகுதி சமண சமயத்திற்கு   முக்கியமான மையமாக திகழ்ந்துள்ளது என்பதையும் விஷ்ணுவர்த்தனாவின் சக ஆண்டு 1049 வது கல்வெட்டு (பொ.ஆ.1128)   விளக்குகின்றது.

 

9. முரசு நாட்டின் தென்பகுதியில் அமைந்த இளந்தை (எ) சித்ரமேழி நல்லூர் எனும் கிராமம் செவிடபாடியில் அமைந்துள்ளது. இங்குள்ள   நன்செய்,புன்செய் நிலங்களை செவிடபாடியில் அமைந்த பாரீஸ்வ ஜீனாலயத்திற்கு தேவதானமாக வழங்கப்பட்டது. இதனை தளபதி தண்டநாயகன் கங்கிப்பையன் அவன்மகன் தண்டநாயகன் எச்சிமையன் மற்றும்   தண்டநாயகன் கேத்தாண்டியார் ஆகியோர் சமணக் கோயில் ஆராதனைக்கும் பராமறிப்பிற்கும் வழங்கப்பட்டதை உணரமுடீகின்றது. இக்கோயில் கங்கிப்பையன் என்பவரே கட்டியிருத்தல் வேண்டும். இவர் ஸ்ரீ புச்சந்திர சித்தாநந்தி தேவர் மகன் என குறிப்பிடப்படுகின்றது. எனவே சித்ரமேழி நல்லூரில் சமணர்கள் கோயிலுக்கு ஆராதiனா செய்தல் உணவு வழங்குதல் போன்றவை இருந்து வந்துள்ளதை தெளிவாக்குகின்றது. இக்கல்வெட்டின் மூலம் சித்ரமேழி நாட்டார் சமணத்துடனும் தொடர்பு கொண்டவர்கள் என்பது வெளிப்படுகின்றது. மேலும் இவர்கள் தங்கிய பகுதியையே சித்திரமேழிநல்லூர் என்ற பெயரிட்டு போற்றியதையும் இவை எடுத்துரைக்கின்றன.

 

சிற்பங்களில் சித்ரமேழி : ஏர்கலப்பையை சிற்பமாக வடிக்கும் பழக்கம் பண்டைய காலம் தொட்டே வழக்கில் இருந்துள்ளது. சங்ககால நடுகற்களிலும், சோழர்கள்கால நடுகற்களிலும் பிற பொருட்களுடன் கலந்து வருவதை காணலாம்.

 

10. சில வணிக கல்வெட்டுக்கள் பொறித்தவற்றில் ஏர்கலப்பையையும் கலந்து புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளதையும் காணமுடிகின்றது.

 

11.   திருக்கோயிலூர் பெருமாள் கோயிலில் சித்ரமேழியை தோரணம் தொங்கவிட்டு அலங்காரம் செய்த நிலையில் காணமுடிகின்றது. கல்வெட்டு செய்தியில் “ஜனனாத வளநாட்டுக்   குறுக்கைக் கூற்றத்து திருக்கோயிலூர் எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண் பூமிச் சித்ரமேழி விண்ணகரான திருவிடைக்கழி நின்றருளின பெருமாள் கோயில்” என தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

 

12. அடுத்து ஊத்தங்கரை வட்டம் ஆம்பள்ளியில் காணப்படும் கோட்டுருவான ஏர்கலப்பைச் சிற்பம். இச்சிற்பம் மிகவும் சிறப்பானதும், நேர்த்தியாக வரையப்பட்டதும், தகடூர் நாட்டில் காணப்படும் முதன்மைச் சிற்பமும் ஆகும். ஆம்பள்ளியிலிருந்து ஜிஞ்சுப்பள்ளி செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் மூன்று பாறைக் குன்றுகள் காணப்படும். ஆந்த பாறைக் குன்றுகளில் ஒன்றில் சமணத் துறவியின் நின்ற நிலை உருவச் சிற்பமும், அடுத்து காணப்படும் பாறையில் ஏர்கலப்பை மட்டும் தனித்து அழகிய நிலையில் முழுமையாக நன்கு கோட்டுருவாக வரையப்பட்டுள்ளது. அடுத்து காணப்படும் பாறையில் விடுகாதழகியபெருமான் வெட்டிய கல்வெட்டுச் செய்தியையும் காணலாம். இவை இப்பகுதியில் சமணர்கள் தங்கி வாழ்ந்துள்ளதையும், சமணப்பள்ளிக்கு ஏரி, குளம் வெட்டி வழங்கியதையும் குறிப்பிடுகின்றது. எனவே வேளாண் தொழிலுக்கு நீராதாரத்தைப் பெருக்கி வேளாண் தொழில் வளர வழிவகுத்தனர் என்பதை இக்கல்வெட்டு தெளிவாக எடுத்தியம்புகின்றது.

 

13. எனவே இப்பகுதியிலும் வேளாண் தொழிலையும்,   ஏர் கலப்பையையும்   தெய்வமாக போற்றி வழிபட்ட சித்ரமேழி நாட்டார் இருந்துள்ளனர் என்பதும் அவர்கள் வணங்க சித்ரமேழி சிற்பத்தை செதுக்கி வைத்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது. இங்கு குறிப்பிடப்படவேண்டிய செய்தி என்னவெனில் சமணர்கள் இங்கு தங்கியபோது வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அவர்கள் சமணத்துறவிக்கு இணையாக ஏர்கலப்பையையும் வைத்து வணங்கியுள்ளனர் எனக் கொள்ளலாம். எனவே வேளாண் என்பது சமய அடிப்படையில் கருதப்படுவது அல்ல எனபதும் தெளிவகின்றது.

 

அன்றி இக்கருத்துக்கு உடன்படாவிடில் சமணர்களுக்கு இங்கு வாழ்ந்த சித்திர மேழி நாட்டார்கள் உறுதுணை புரிந்துள்ளனர் என்று கொள்ளலாம். இப்பகுதியில் வாழ்ந்த சித்திரமேழியார்கள் ஏற்கனவே சமணத்திற்கு உதவி புரிந்ததை நினைவில் கொள்ளலாம். மேலும் இச்சித்திரமேழி சிற்பங்களை வணிகக் கல்வெட்டுக்களிலும் பொறித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காணப்படுவதைப் போலே விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம், காஞ்சிபுரத்திலும் சித்திரமேழி சிற்பபொறிப்புகளை காணமுடிகிறது எனில் அது தொடர்ந்து தொண்டை மண்டலத்திலும் செழிப்புற்றிருந்ததையே காட்டுகின்றது.

 

சித்ரமேழி நாட்டாரும் சமயமும் : சித்ரமேழி நாட்டார் என்பவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலை மேற்கொண்டவர்கள் இவர்களே பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகம், அறப்பணி, ஊர் நாட்டாமை, போர்த்தளபதி, தட்டான் என பல தொழில்களிலும் பங்கேற்றனர். அதுபோல சித்ரமேழி நாட்டார் சைவ, வைணவ, சமண சமயத்திலும் பல பகுதிகளில் தங்களை   இணைத்துக்கொண்டனர். சோழர்கள் காலத்தில் சபை, நகரம், வணிகம் போன்ற குழுக்கள் இருந்தன.   உழவுத்தொழில் மேற்கொண்ட குழுக்களை சித்ரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.

 

14. திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகத்தையும் தலையாகக் கொண்டு செயல்பட்டனர் என்பது ஏற்புடைத்து. எனவே சித்ரமேழி என்ற அடைமொழி கொண்டு வேளாண் தொழிலில் ஈடுபட்ட மக்களன்றி பிற தொழில்களை மேற்கொண்டவர்களையும்   சித்ரமேழி என்ற அடைமொழியிட்டே அழைத்துள்ளனர்.   குறிப்பாக சேலம்,   ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களில்   சித்திரமேழி தட்டாநெந்,15.   சித்திரமேழி தட்டான் குழுமி16. என்றும் குறிப்பு காணப்படுவதை ஒப்பிடலாம். இவை காலப்போக்கில் சித்திரமேழி நாட்டார் பிற தொழிலிலும் ஈடுபட்டடதையே குறிக்கின்றது. அணைத்து சமயங்களிலும் சித்ரமேழி நாட்டார் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதையே சைவ, வைணவ, சமண கோயில்களில் காணப்படும் சித்திரமேழி குறித்த செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன. சித்தரமேழி நாட்டார், சித்திரமேழி விண்ணகரத்து நாட்டார், சித்திரமேழி விண்ணகரத்து பெரிய நாட்டார், சித்திரமேழி பெரிய நாட்டார் போன்ற பெயர் அமைப்புகள் சமய வேறுபாட்டை குறிக்கின்றனவா அன்றி அணைத்து சமயத்திலும் சித்திரமேழி பெரிய நாட்டார் பிரிவு கலந்துள்ளனரா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும். முறையாக   உழவுத் தொழிலில் ஈடுபட்டோரை நாடு என்று குறித்தனர். பின்னர் நாட்டை நிர்வகிக்கும்   பொழுது நாட்டார்   என பெயர் பெற்றனர்.   இவர்களே சித்ரமேழிநாட்டர்   என்றும்     சித்ரமேழி   பெரிய நாட்டார்       என்றும்   அழைக்கப்பட்டனர்.     உழவுத்தொழிலைத்   தொடர்ந்து     வணிகம்   வந்தது   இவ்வணிகக்   குழுக்களைக்   குறிப்பிடும்   பொழுது   நானாதேசிகர், திசையாயிரத்து ஐநூற்றுவர் என்றும், உழவுத்தொழில் பிரிவு வணிகர்களை குறிக்கும் பொழுது சித்ரமேழி பெரிய நாட்டார் எனவும் அழைத்தனர்.   ஊர், நாடு, பெரிய நாடு, பேரிளமை நாடு என்பதும் பெரிய பகுதிகளாகும் இப்பகுதிகளை நிhவகிப்பவர்கள் தங்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. எனவே தங்களது சமுதாயத்திற்கு முழுவதும் பொறுப்பானவர்களையே அமைத்து வந்துள்ளனர். அத்தகைய பெருமக்களை சித்திரமேழி பெரியநாட்டார் அல்லது பெரியநாடாள்வார் என்றும் அழைத்துள்ளனர்.17. எனவே வேளாண் தொழில்புரிந்து நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை புரிந்த மக்களே சித்ரமேழி பெரிய நாட்டார் என்றழைக்கப்பட்டவர்கள் என்பது பொருந்தும். அவர்கள்     தமிழகத்திலும் குறிப்பாக தகடூரிலும்   பொ.ஆ. 10 ஆம்   நூற்றாண்டில் செழிப்புடன் இருந்தமையையே   இவை உணர்த்துகின்றன.

 

அடிக்குறிப்புக்கள் :

 1. புறநானூறு .     பாடல் எண் 35.
 2. நாகசாமி. இரா.   யாவரும் கேளிர்,வாசகர்வட்டம்,சென்னை. 1973.
 3. மேலது.
 4. மேலது.
 5. பிள்ளை.கே.கே.   தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்,தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம்,சென்னை 1975.
 6. தெ.இ.க.சா. எii       எண்.129.
 7. நாகசாமி.இரா.           யாவரும் கேளிர், வாசகர்வட்டம் சென்னை.1973
 8. செல்வராஜ்.ச.     தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும் (அச்சில் )
 9. செல்வராஜ்.ச.     சந்திரசூடேசுவரர் திருக்கோயில் கட்டுரை.
 10. செல்வராஜ்.ச.     மல்லச்சந்திரம் நடுகல். கல்வெட்டு காலாண்டு இதழ் தொ.து.
 11. ராசகோபால்.சு.   பொலிச்சலூர் வணிகக் கல்வெட்டு.
 12. தெ.இ.க.சா.     எண்.128
 13. த.மா.க.தொ.1.       எண். 145
 14. நாகசாமி.ரா.     யாவரும் கேளிர்,வாசகர்வட்டம்,சென்னை.1973.
 15. கிருஷ்னன்.       சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கல்வெட்டு :எண் 97.
 16. சீதாராம் குருமூர்த்தி.இ.ஆ.ப. ஈரோடு மாவட்ட கல்வெட்டு தொ.1.எண் 114.
 17. தி.ஸ்ரீ.ஸ்ரீதர்.இ.ஆ.ப.   Select Inscription of TamilNadu,Department of Archaeology Government of Tamilnadu,Chennai.2006

நன்றி:   திட்டக்குடி பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டில் எழுபத்தொன்பது நாட்டு           விண்ணகர் எம்பெருமான்கோயில் என்றும்,   திருக்கோயிலூர் பெருமாள் கோயிலில் காணப்படும் எழுபத்தொன்பது நாட்டு பதினெண்பூமி       சித்திரமேழி விண்ணகர் என்ற குறிப்பு தொடர்பாக திரு. .பார்த்திபன்.வரலாற்று ஆய்வாளர்,தருமபுரி அவர்களுடன் கலந்துரையாடிய போது வைணவத்தலங்களில் சித்ரமேழி நாட்டாரை இவ்வாறு அழைத்திருக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.